Headlines

ஒரு நாள் சிசுவை புதைத்த தாய் கைது

முஹம்மது முஸப்பிர் பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பிரதேசத்தில், தான் பிரசவித்த சிசுவை கடந்த வெள்ளிக்கிழமை (02) தன்னுடைய வீட்டு வளாகத்தில் தாயொருவர் புதைத்துள்ளார். இதன் பின்னர், சனிக்கிழமை (03) முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய், தனது குழந்தை இறந்து பிறந்ததால்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட நவவி MP

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி…

Read More

நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பஹா மாவட்டத்தின்,  நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். நீர்கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் வர்த்தக சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகம் என்பன காலந்துகொண்டு வேட்பாளர்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்ததுடன்,  அமைச்சர்…

Read More

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றவும் – மகிந்த

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாகஇ பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,…

Read More

பேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

பேருவளை பிரதேச சபை, சீனாவத்தை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில், அழுத்கம சீனாவத்தை மஸ்ஜித் வீதியை செப்பனிடும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சீனாவத்தை மஸ்ஜித் ஒழுங்கை வீதியின் புனர்நிர்மாணப்  பணிகளை, பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதை செப்பனிடல் பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்து வீதியை மக்கள் பாவனைக்கு…

Read More

இஸ்மாயில் எம்.பியின் முயற்சியில் சம்மாந்துறையில் “அரச ஒசுசல”!

மக்கள் நலன் கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சம்மாந்துறையில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அண்மையில் சந்தித்து க் கலந்துரையாடிய இஸ்மாயில் எம்.பி, சாம்மாந்துறை பிரதேசத்தில் “அரச ஒசுசல” ஒன்றை அமைப்பதற்கான தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார். மேலும், சம்மாந்துறை பிரதேசத்தில் ‘அரச ஒசுசல’ ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு என்பது, முற்றிலும் பொய் – மக்காவிலிருந்து ஹக்கீம்

ரவூப் ஹக்கீம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக‌ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க கட்சி முடிவெடுத்துள்ளதாக தற்போது பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கட்சி ஆதரவாளர்களினதும், உயர்பீடத்தினதும் கருத்துக்களை அறிந்தபின்னரே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

Read More

அமைச்சர் றிசாத் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவியை இராஜினமா செய்யமாட்டார்- பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார். திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (02) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட…

Read More

ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர் – சிராஸ்

– நவாஸ் சௌபி – தனது இயலாமையை தொடர்ந்தும் மேடைப் பேச்சுக்களில் பேசி வருகின்ற ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர். முதலில் அவர் தன்னைச் சுத்தப்படுததிக் கொண்டு எங்களைப் பற்றி பேச வரவேண்டும். நான் கல்முனையின் மேயராக இருந்து செய்ததைக் கூட ஹரீஸ் ஒரு எம்பியாக இருந்து செய்யவில்லை. என கல்முனையின் முன்னாள் மேயர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 ஆம் இலக்க வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் இன்று 06.08.2015…

Read More

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்….

“யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும்…

Read More

நாட்டை முன்னேற்ற அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும்

நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (8) பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை வெற்றிக்கொள்வதுடன், அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் மேல்மாகாணம் மற்றும் நாடு பூராகவும் அதிகமான ஆசிரியர்…

Read More