Headlines

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி…

Read More

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு இன்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கோட்டை நீதவான் திலினி கமகேயினால் பிறப்பிக்கப்பட்டது.அல் – குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார உட்பட பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகள்…

Read More

‘புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்’

2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்  அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர்  புலிகளுக்கு கப்பமாக  செலுத்தினார்’ என்றார். tm

Read More

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை மேம்படுத்த விசேட திட்டம்

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை தேசிய தரத்திலிருந்த சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடனான விசேட செயற்றிட்டமொன்று இன்று (23)  உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் பம்பரகல பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது கடந்து ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மலர் செய்கை முயற்சியாளர்களின் கூட்டுறவுச்சங்கத்தினரது விற்பனை நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.கடந்த அரசின் போது 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்திற்காக தற்போது 80 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை…

Read More

“கிழக்கில் முஸ்லிம் மாகாணமின்றேல் இணைப்புக்கு ஆதரவு கிடைக்காது” சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- வடக்கு – கிழக்கு தமிழ் மொழி மாநிலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாண சபைக்கான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியம் முன்னெடுக்காது போனால் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு தமிழ்மொழி மாநிலத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி அதிகாரத்தையோ அல்லது சமஷ்டியையோ தமிழர்களுக்கு வழங்குவது வட, கிழக்கு முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாகவும்…

Read More

உங்கள் செல்லப் பிள்ளைகளை சிறகைவிரித்து பறக்கவிடுங்கள்!

பெற்றோர்களே, குழந்தைகளிடம் நீங்கள் அன்பு காட்டுவது சரிதான்! அதற்காக அவர்களின் கையை விடாமல் அவர்களுடனே பயணிக்க எண்ணக்கூடாது. நம்மிடமிருந்து உருவானதால் அவர்களது வாழ்வை, வாழவிடாமல் நம் இசைக்கு அவர்களை ஆடவிட்டு நெருக்கக் கூடாது. நாம் சிறு வயதில் பாடக் கற்றிருக்கலாம், ஆடக் கற்றிருக்கலாம் என்கிற நமது ஆசைகளை குழந்தைகள் மீது சுமையாய் ஏற்றக் கூடாது. அவர்கள் குழந்தையாக சுற்றித் திரிய, தமது மனம் எந்தப் பக்கம் போக விரும்புகிறது என்பதை அறிவதற்காகவாவது அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

Read More

இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: நேதன்யாகு கட்சி வெற்றி

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது 99.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதில் நேதன்யாகுவின் லிகுட் கட்சி முன்னணியில் உள்ளது. இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. எனவே,…

Read More

கவிதை நூல் வெளியீட்டு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கொடகே தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய “மழை நின்ற போதும்” கவிதை நூல் வெளியீட்டு விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்சொன்னவாறு…

Read More

வடக்கு அகதி முஸ்லிம்களுக்கு அமைச்சர், ஹக்கீம் பூச்சாண்டி காட்டுகிறார். மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் காட்டம்

  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து  வரும் உறவாள் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று காலை (14.07.2017) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில்…

Read More

சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வு வத்தளை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

“சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்” – முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே  பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தன்னை ஆதரித்து, ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், “வரவுள்ள பாராளுமன்றம் சுகமான பாராளுமன்றமாக இருக்கும் என்றெண்ணி, பாராளுமன்றம் செல்ல சிலர் ஆசைப்படுகின்றனர். அது சுமையான பாராளுமன்றம் என்பதை…

Read More