வட்டக்கண்டல் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் அவர்களினால், நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த மன்னார், மாந்தை, வட்டக்கண்டல், காத்தங்குள வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த தேர்தல் காலத்தில் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள இந்த வீதியை புனரமைத்து தருமாறு வேண்டியிருந்தனர். அந்த மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு!
புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக், இணைப்பாளர் இர்ஷாட், மர்சூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
பீகாரில் மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரிலும் அனைத்து வகையாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி இல்லை .அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும்…
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா
அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். தேசத்தை மீண்டும்ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இராணுவமும் சித்தாந்தப்படியும்,…
மஹிந்த ஆதரவு அணியின் ஜெனிவா பயணம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. தலைமையிலான மஹிந்த ஆதரவு அணியினருக்கு இதுவரையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனவே தற்போது அவர்கள் ஜெனிவா அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்வதால் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் முட்டுக்கட்டையிட முடியாதென நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான அந்தஸ்து வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக ஜெனிவா சென்றுள்ளமை குறித்து வினவியபோதே அவர்…
தன்னை நம்பிய சமூகத்திற்காக எதனையும் இழக்க துணிந்தவரே ஜவாத்…!
இன்றுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மிகவும் வேறுபட்டவர். அவரின் தோற்றம் சிங்கத்தை நேரடியாக பார்ப்பது போன்றிருக்கும். அவரின் பேச்சு சிங்கத்தின் கர்ஜனையாகவே இருக்கும். தோற்றத்திலும், பேச்சிலும் மாத்திரமல்ல வீரத்திலும் அப்படியே இருப்பார். இவரிடம் பல நல்ல பண்புகளுள்ளன. அதில் மிக முக்கியமானதே சுயநலம் பார்க்காது, நீதிக்காக எதனையும் இழக்க துணிவதுதான். மறைந்த தலைவர் அஷ்ரபோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். அவரது மேடைப் பேச்சுக்கள் எப்போதும் மறைந்த தலைவரை விழித்ததாகவே இருக்கும்….
அரசியல் அதிகாரம் இல்லாத போதும் அம்பாறை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது’ – வேட்பாளர் ஹனீபா மதனி!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு…
மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது. ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது. ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின்…
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…
மௌலவி ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பது பற்றி ஆலோசனை
2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக இது பற்றிய கருத்தரங்கை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். 1992 முதல் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்காக உலமா கட்சி பாரிய அளவில் போராடியதன் பயனாக கடந்த…
‘முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும்’ அட்டாளைசேனையின் அன்ஸில்!
-ஊடகப்பிரிவு- புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் பல மு.கா முக்கியஸ்தர்களும் இருந்தார்கள். இச்சீர்திருத்தம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றது எமது நாட்டின் அடிப்படை சட்டங்கள் மாறும் இவ் அரசியலைப்பு திருத்த சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேச இந்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு நபரும் கலந்துகொள்ளவில்லை கலந்துகொண்டாலும் எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். என முன்னாள்…
