Headlines

பெரியமடு மக்களின் நீண்டகால நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!




மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்பின் பேரில் OHRD தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு பாடசாலைக்கு நீர்த்தாங்கி சகிதம் அனைத்துவகையான நீர் வழங்கல் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன.

அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களின் தலைமையில் இக்குடி நீர் திட்டம் மிகவும் விமர்சையாக இன்று (05/07/2018) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் நௌபீர் ஆசிரியர்,அமைச்சரின் பிரதேச இணைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான சனூஸ் மற்றும் ,OHRD நிறுவனத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் மனாஸ் உள்ளிட்டவர்களுடன் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த குடி நீர் வழங்கள் திட்டமானது பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமன்றி பிரதேசத்தில் வாழும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதும், குறிப்பிடத்தக்கது.

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *