இழுபறி நிலையிலிருந்த ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகள் நாளை
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நேட்டோ துருப்புகளின் பாதுகாப்புடன் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னணியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டார்.இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப்கனி அகமதுசாய் முன்னணியில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா மறுக்கவே முடிவுகளை வெளியிட முடியாமல் அங்கு குழப்பமான சூழ்நிலை எழுந்தது.அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி தொலைபேசி…
