Headlines

நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு பிரதம அதிதியாக அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றது என்ற அச்சம் எனக்கு உள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று திங்கள்கிழமை இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

அப்துல்கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்க முடியாது : இந்திய அரசு !

மறைந்த முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை  இந்திய அரசு நிராகரித்துள்ளது. அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளித்து உள்ள உள்துறை அமைச்சகம், தலைநகர் டில்லியில் இதுவரை எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை என்றும், அதனால் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என்றும் தெரிவித்துவிட்டது….

Read More

ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய் – அஸ்வர்

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண க்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் செயற்­படும் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஆட்­சியின் போதே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக கூறி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளுக்கு, இறு­தியில் ஏமாற்­றமே பதி­லாக கிடைத்­துள்­ளது….

Read More

நீதிமன்ற தடையையும் மீறி நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்ரம் விதித்துள்ள தடையையும் மீறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

கொழும்பில் பதற்றம்

கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

சோமா எதிரிசிங்க காலமானார்

இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகி மற்றும்முன்னணி பெண் வர்த்தகர் சோமா எதிரிசிங்க காலமனார். 939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பெறுமதி வாய்ந்த மனித வளம் முதியோர்களே : ஜனாதிபதி

இனிமையான வயோதிபம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர். இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில் முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

நிந்தவூர் ஸ்டார் ஸபா விளையாட்டுக் கழகத்தின் பொது கூட்டமும் விசேட கலந்துரையாடலும்!

விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டோடு மட்டும் நின்றுவிடாமல் கல்வி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி தொடர்பிலும் செயற்படுவதோடு அதன் அங்கத்தவர்களான இளைஞர்கள், தங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் ஸ்டார் ஸபா விளையாட்டுக்கழகத்தின் பொது கூட்டமும் விசேட கலந்துரையாடல் நிகழ்வும், நிந்தவூர் பிரதேச சபையின் அரசடிநகர் வட்டார உறுப்பினர் MLA மஜீட் அவர்களின் காரியாலயத்தில் அண்மையில் (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

ஒல்கொட் மாவத்தையில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

வவுனியா மாவட்ட கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவின் அழைப்பின் பேரில் அடமஸ்கட, கலுக்குன்னாமடம், நெடுங்குளம், அவரந்துலாவ,மருதமடு,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சரின்நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும்,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களும் இன்றைய விஜயத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள…

Read More