Headlines

எண்ணெய் கலப்படம் செய்தவருக்கு அபராதம்

தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்…

Read More

கடும்போக்கு பிக்குகளை கட்டுப்படுத்துங்கள்: 21 முஸ்லிம் MPகள் கையொப்பமிட்ட மனு ஜனாதிபதியிடம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம்…

Read More

சா/த பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

வ்வாண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பரீட்சை விண்ணப்பத் திகதி, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

தொழிலுக்காக சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய நடைமுறை

தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொழில்வாய்ப்பிற்கு பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தொழில்  வழங்குனர்களின் செலவை குறைத்துக்கொள்வதும், பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைக்கான காரணமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை அந்நாட்டு தொழிற்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின் ஊடாக பணியாளர் ஒருவரை அமர்த்துவதற்கு சவுதி குடும்பமொன்று செலவிடும்…

Read More

நாமல் கைது!

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

‘பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அரசியலிலே புதுமுகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெறச் செய்தால் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று, அதிகமான அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஏ.யூ.நாசரை அறிமுகப்படுத்தும் கூட்டம், பிறைந்துரைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு…

Read More

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை

சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது….

Read More

றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியும்

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர்…

Read More

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி  அகதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்!

-சுஐப் எம்.காசிம்   – வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை ஆசிரியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது, வடமாகாணத்திலிருந்து சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் கட்டாய இடப்பெயர்வினால் வந்த அகதி…

Read More

இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?

ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு உண்மை மறைக்கப்பட்டு பிழையான கருத்தாடல்கள் கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களிடம் விதைக்கப்பட்டு வருகின்றது. ஒரு உண்மையை மறைத்து விடாது, இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு விடாது, மக்கள் மன்றத்திற்கு நடந்ததை நடந்ததாகக் கொண்டு சென்று மக்களை விழிப்பூட்டுவது ஊடகவியலாளர்களுடைய கடமையாகும். அந்த வகையிலும்,…

Read More

‘நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன்’

அரசன் அர­சனைப் போல் உண­வ­ருந்த வேண்டும். ஜனா­தி­பதி தன் சிறப்­பு­ரி­மை­களை அனு­ப­விக்க வேண்டும். அதை­வி­டுத்து கிராம சேவ­கரைப் போல் செயல்­ப­டக்­கூ­டாது என என்னை விமர்­சித்­துள்ளார். ஆனால், நான் இதற்கு தயா­ரில்லை. அனை­வ­ருக்கும் சம அந்­தஸ்து என்ற பௌத்த தர்­மத்தை கடைப்­பி­டிப்­பவன் நான் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

Read More