Headlines

நவி பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(AD)

Read More

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் அதனையொட்டி நடைபெறும் கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் எம் ஏ எம் அக்ரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாவின் பிரதிச் செயலாளர் எம் எஸ் எம் தாஸிம் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More

சிறுமி சேயா படுகொலை சந்தேகநபர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன் பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களும் விஷேட மரபணு பரிசோதனைக்கு (டீ.என்.ஏ.) உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அதன்­படி சந்­தேக நபர்­களின் உயி­ரியல் மாதி­ரி­களைப் பெற்று பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, சிறுமி சேயா செதவ்­மியின் சட­லத்தில் இருந்து பெறப்­பட்ட…

Read More

‘முஸ்லிம்க‌ளின் இருப்பைக் க‌ருத்திற்கொண்டு மு.கா இத்தேர்தலில் வாப‌ஸ் வாங்கி விலகுவதே, இதுவ‌ரை கால‌மும் அக்க‌ட்சி செய்த‌ அநியாய‌ங்க‌ளுக்கு பிராய‌ச்சித்த‌மாகும்’ – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்- க‌ல்முனை உள்ளூராட்சி ச‌பையை 94ம் ஆண்டு முத‌ல் ஆட்சி செய்தும் இன்று வரை க‌ல்முனையையும் நாச‌மாக்கி க‌ல்முனை சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ங்க‌ளையும் பிரித்த‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ், க‌ல்முனையின் எதிர் கால‌ ந‌ன்மையையும், முஸ்லிம்க‌ளின் இருப்பையும் க‌ருத்திற்கொண்டு இத்தேர்த‌லில் வாப‌ஸ் வாங்கி புதிய‌ முஸ்லிம் க‌ட்சியொன்றுக்கு அனைத்து முஸ்லிம்க‌ளும் வாக்க‌ளிக்க‌ வ‌ழி விடுவ‌தே இது வ‌ரை கால‌மும் அக்க‌ட்சி க‌ல்முனைக்கு செய்த‌ அநியாய‌ங்க‌ளுக்கு பிர‌ய‌ச்சித்த‌மாகும். இன்றுள்ள‌ நிலையில் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையை முஸ்லிம்…

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா…

Read More

மார்ச் 23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

2016 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் முதல் 23ஆம் திகதி மாலை 3.09 மணி முதல் 7.24 வரை தோன்றுமென கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சன்தன ஜயரட்ண தெரிவிக்கின்றார். இந்த சந்திர கிரகணம் கிழக்கு வானில் தெரியும். இது நிழல் சந்திர கிரகணம் என்பதால் சந்திரனின் ஒளிமங்கலாகத்தெரியும். இவ்வருடத்தில் மற்றுமொரு சத்திர கிரகணம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு நிகழுமெனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

Read More

இலங்கை பொருளாதார மாநாடு 2016

இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்…

Read More

சோபித்த தேரரின் இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம்களின் பணிஸ் தன்சல்..

மறைந்த மரியாதைக்குரிய  மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு இன்று இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தோருக்கு முஸ்லிம் சகோதரர்கள் தானசாலையொன்றை அமைத்து ‘பணிஸ்’ வழங்கியிருந்த நிகழ்வை சிங்கள ஊடகங்களும், இன- மத நல்லுறவுக்கு இலங்கை முஸ்லிம் உதாரணமாக வாழ்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தது காணக்கூடியதாக இருந்தது. இன, மத நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்த இந்நிகழ்வின் படங்கள் சில..

Read More

கொத்தாந்தீவு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்!

புத்தளம்,  கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தகர்கள் ஆகியோர், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் அவர்களை  அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது, தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை காணப்படுகின்றது எனவும், எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  பிரதேச சபை உறுப்பினர்…

Read More

துப்புரவு பணியாளர்களின் தேவைகள் பற்றி றிஷாத் கேட்டறிந்தார்

வெல்லம்பிட்டிய, மெகொட கொலொன்னாவ, புத்கமுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள், வெள்ளம் வடிந்து வருவதனால் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு கொலொன்னாவ பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் இயங்கும் நிவாரண இணைப்புப் பணியகத் தொண்டர்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களும் உதவி வருகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்தப் பிரதேசங்களுக்கு பலதடவை சென்று, பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களையும், பாவனைக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார். நேற்று…

Read More

கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி வீதியின் ஓரமாக இருந்த கப்டேரியாவில் உழுந்து வடையும், தேனீரும் அருந்தி விட்டு வெளியேறும் வேளையில் இஷாஹ் தொழுகைக்கான அதான் ஒலித்தது பக்கத்திலிருந்த கெபின் சிறிய பள்ளிவாயலில் தொழுது விட்டுச் செல்லலாம் என எண்ணி பள்ளிவாயலுக்குள் நுழைந்தேன். ரமளானில் ஒவ்வொரு நாளும் குர் ஆனின் ஒரு சிறிய பகுதியை ஓதி…

Read More

‘மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை’ சட்டத்தரணி அன்சில்!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே…

Read More