நாமலின் விதி சில தினங்களில் தெரியும் – ரவி கருணாநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க…
மைத்திரி வீடு செல்ல வேண்டும் : உதய கம்மன்பில
எமது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் ஆலோசணைகளின் பேரிலேயே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிச்செல்ல வேண்டும் என்று பாராளுமன்ற உருப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உருமயவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநீக்கம்
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் நேற்று (2) தீர்மானித்துள்ளது. (vk)
9 பேரை இஸ்லாத்திற்கு அழைத்துவந்த ஊமைச் சகோதரி
நீங்கள் பார்க்கும் புகைப்படம் நமது மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டு நம்மை உண்மையாக நெகிழவைக்கும் ஒரு அழகான புகைப்படம். ஆம், இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த சகோதிரியால் பேசவும் முடியாது. செவியுறவும் முடியாது ஊமையாகவும் செவிதிறனை இழந்தவராகவும் உள்ள அந்த சகோதிரியின் அளபெரிய முயற்சியினால் 9 சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர். இதை குறிப்பிடும் போது தொகுப்பாளர் தன்னையும் அறியாமல் அழுது வீடுகிறார் அனைத்து திறனையும் பெற்றிருக்கும் நாம் மனிதகுலத்தை நரகபடுகுழியில் இருந்து பாதுகாக்கும் உன்னத பணியில்…
புத்தளம் முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம் – SLTJ
ஜூலை 20 முதல் 30 வரை புத்தளம் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்று முன் தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சகோ. பவ்சாத் தலைமையில் நடைபெற்றது. இணைவைப்பில் மூழ்கியிருக்கும் மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சியின்…
பனாமா ஆவணம்: ஆராய விசேட குழு
வெளிநாட்டிலுள்ள இரகசியக் கணக்குகள், சொத்துகள் தொடர்பான விவரங்களில் வெளியிட்டுள்ள பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து சரியான உறுதிப்படுத்தல்கள் ஆராய்வதற்கு, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
முன்னாள் போராளி பிரபாவும் கைது
புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
காலிக்கு வராத சுக உறுப்பினர்கள் குறித்து விரைவில் தீர்மானம்
கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் – மஹிந்த
கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (1) கிருலப்பனையில் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் தமக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்…
குவைத்திலிருந்து 41,000 பேர் வௌியேற்றம்!
சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41,000 பேரை குவைத் இதுவரை வௌியேற்றியுள்ளது. இவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு 26,600 பேரும் 2016 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 14,400 பேருமாக மொத்தம் 41,000 பேர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் வீசா காலாவதியானவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள்…
இந்த வருடம் தேர்தல் இல்லை!
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என,…
