Headlines

இன்றும் பல பிரதேசங்களில் மழை பொழியலாம்!

நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (2) பிற்பகல் மழையுடன் கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

போலி தயாரிப்புக்கள்: சீனாவிற்கு முதலிடம்

சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து…

Read More

கட்டாரில் இலங்கையருக்கு 1 வருட சிறை

உத்தியோகபூர்வ ஆவணமொன்றை போலியாக தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையருக்கு டோஹா கட்டாரில் ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டோஹா கட்டாரிலுள்ள குற்றவியல் நீதிமன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றதாக தெரிவித்து குறித்த இலங்கையரினால் குறித்த ஆவணம் கட்டாரிலுள்ள அரச திணைக்களமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆராய்;ந்த நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. குற்றவாளியை தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு…

Read More

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் (2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடரிபில் கருத்து தெரிவித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பை நீக்குவது உசிதமானதல்ல எனவும், ஏனைய அரச தலைவர்களைவிட பயங்கரவாதிகளின் எதிரியாக அவர் கருதப்படுவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது…

Read More

அமைச்சர் சரத் அமுனுகம ஜெர்மனிக்கு விஜயம்

விசேட செயற்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார். சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் அமுனுகம இன்று (2) ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கின்றார். இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஒன்றில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலேயே அமைச்சர் அமுனுகம இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். ஜெர்மனியின் பிராங்பொர்ட் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. நகர அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான…

Read More

சஜின் வாசுக்கு கொலை அச்சுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலப்பிட்டிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான சஜின் வாஸ் குணவர்தனவை காலி மே தினக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (30ம் திகதி) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. காலி கூட்டத்தில் பங்கேற்றால் கொலை செய்து விடுவதாக பெண் ஒருவர் சஜின்…

Read More

முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது: இரா.சம்பந்தன்

– என்.எம்.அப்துல்லாஹ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் 1-5-2016 அன்று யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் பெருந்திரளான மக்கள், கட்சிப்பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றது. அதன்போது சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் “எமது பிராந்தியத்தில் முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார், நாம் ஒரு நீண்ட அமைதியற்ற காலத்தை கடந்துவந்திருக்கின்றோம், இவ்வாறான சூழ்நிலை மீண்டுமொருதடவை எமக்குத் தேவையற்றது, நாம் எமது பிராந்தியத்தில் அமைதியாக…

Read More

15 வீத வற் வரி அதிகரிப்பு அமுல்

– எஸ்.வினோத் – அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி இன்று இரண்டாம் திகதி  திங்கட்கிழமை  முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.  அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த  11 சதவீதமான பெறுமதி சேர் வரி   இன்று முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும்  என்று   நிதியமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார  கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட…

Read More

கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை : பிரதமர்

எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும்  கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்….

Read More

கிருலப்பனை மேதின பேரணியில் மயங்கி விழுந்த எம்.பி

நேற்று, (01) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேதின பேரணியில் செல்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருலப்பனையில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின பேரணியில் பங்கேற்றிருந்தபோதே அவர், மயங்கிவிழுந்துவிட்டார்.

Read More

மைத்திரியுடன் மே தின சமரில், மஹிந்த படுதோல்வி

– நஜீப் பின் கபூர் – நேற்று (01) நடைபெற்ற மே தினம் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான ஒரு நேரடி யுத்தமாகவும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது. இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை நாம் கிருலபனையியே நடாத்துவேம் என்று அவர்கள் நேற்றுவரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று தங்கள் அணியிலுள்ள 52 பேரில் மூன்று பேரைத்தவிர ஏனைய அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கிருலபனைக்கு சமூகம் தருவார்கள் என்றும் அவர்கள்…

Read More