Headlines

அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

Read More

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More

NVQ (தேசிய தொழில்சார் தகைமை முறைமை) சான்றிதழின் அவசியம்

– கஹட்டோவிட்ட ரிஹ்மி – தேசிய தொழில்சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ) அதிகமானோர் NVQ பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அறியாதும் இருக்கலாம். இந்த முறைமை ஆனது ஒருவருக்கு தொழில் சார்ந்த தகைமையை கொடுத்து விடும். NVQ சான்றிதழ் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால் தகுதியான தொழில் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வது இலகுவாகி விடும். அண்மைக்காலங்களில் அரச, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கூட NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தகவல்…

Read More

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 இன் முதலாவது சட்டம் எனவும் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை…

Read More

நமது சமூகம் உயர்வான நிலையை அடைய, கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அ.இ.ம.க வின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற குருநாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலை மாணவன் முஹம்மத் அகீல் மற்றும் முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z புள்ளியையும் பெற்று சாதனை படைத்துள்ள கலைப்பிரிவு மாணவி றிஸ்வினா…

Read More

மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி!

-ஊடகப்பிரிவு- ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று  (30) இடம்பெற்றது. மருதமுனை அல்ஹாஜ் நெய்னா முஹம்மத் (JP) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்த்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும்  பங்கேற்றிருந்தனர்.        

Read More

உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார்….

Read More

சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் என்ற கிராமத்தில் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமா சோதரியின் நினைவாக எழுதப்பட்ட கவிதை. சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!   ஆத்தோரம் மடுத்தோண்டி அதில் ஐரி மீன்களை ஓடவிட்டு பிடித்து விளையாடிய பிஞ்சு மகள் சீமா..! துள்ளி விளையாடும் உன்னை கயவன் கிள்ளி எறிந்த செய்தி காது வழியாகச் சென்று கண்கள் வழியாக வெளியே வந்தது. உன் பால் வடியும் முகம் கண்டுமா இந்தப் பாதகன் தேசமாக்கினாhன் உன்னை…..

Read More

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை – ரோசி சேனாநாயக்க

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுவருவதாக  அமைச்சர் தெரிவித்தார். சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க…

Read More

“எவரையும் தோற்கடிப்பது எமது நோக்கல்ல; மக்கள் சேவையே எம் இலக்கு” – வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!

“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து,…

Read More

நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “60 மாதங்களில் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஐந்து திட்டங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல்…

Read More

நவாஸ் ஷெரீபை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமா

ராணுவ பலத்தை அதிகரிப்பதை விட்டு, இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருவதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு வருகை தர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, அக்டோபர்…

Read More