Headlines

இலங்கையில் மலேரியா தொற்று இல்லை – அமைச்சர் ராஜித

சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று உத்தியோகவபூர்வமாகத் தெரிவித்தார். அமைச்சு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பயனாக 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டினுள் எவரும் மலேரியா நோய்க்கு உள்ளாகவில்லை என்று- சுட்டிக்காட்டிய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, எம்மைச் சூழவுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி நாடு திரும்புபவர்கள்…

Read More

நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை

நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லை என்று ஐ நா தெரிவித்துள்ளது. இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது. நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு…

Read More

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள் வாக்குகளினால் அக்குறனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அல்ஜாஜ் நஸார் அவர்கள் வட்டாரத்தின் அமைப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டார். மேலும் ஏனைய உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்பு செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்களும், மாவட்ட அமைப்பாளர், ஹம்ஜாட் ஹாஜியார் அவர்களும் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.அத்தோடு அக்குரனை…

Read More

ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்

பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர், வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின்…

Read More

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜுவான் மெண்டஸ் இடம் அரசாங்கம் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளது. குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளுக்கான சட்ட அமைப்புகள், மற்றும் புலனாய்வுப்பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்படவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப்பதிலாக புதிய சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் விரைவில்…

Read More

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை,  அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முனைகின்றனர். இஸ்லாத்துக்கு மிக நெருக்கமான மார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படு பயங்கரவாத கயவர்களால் கொல்லப்பட்ட…

Read More

“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் மன்னார் கூட்டத்தில் கோரிக்கை !

புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று  இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென மன்னாரில் இன்று (15)  பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  அவர்  முன்னிலையில்   வலியுறுத்தினார். இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் அங்கு வாழுகின்ற மக்களின் பிரதிநிதிகளையும் முக்கியஸ்தர்களையும் பிரதமர் அழைத்து இந்த பிரச்சினையை…

Read More

புதிய அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை பகிர்வது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, கடந்த நாட்களில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு பிற்போடப்பட்டு, கட்டம் கட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் நாளை முதற்கட்டமாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக 19 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 16 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. புதிய…

Read More

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது!

-ஊடகப்பிரிவு- உரிமைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று கூறி பாராளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் இந்த மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லா இப்படிப்பட்டவர்களினால் மன்னார் நகர சபைக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது என்றும் கூறினார். மன்னார் நகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சி சார்பில் பெற்றா மற்றும் பெரியக்கடை வேட்பாளராக…

Read More

“கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்”- இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில்…

Read More

புலிக் கொடிகளுடன் தம்மை எதிர்த்தவர்களை நோக்கி, கையசைத்த ஜனாதிபதி மைத்திரி

(பட உதவி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.

Read More