Headlines

தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…

Read More

யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் 30 ஆம் திகதி மைத்திரி, 2 ஆம் திகதி மஹிந்த

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது எதிரணி விடுத்துள்ளது. இதன்படி 30ம் திகதி பொது எதிரணியினரின் வடமாகாணத்தில் 3வது பிரச்சாரக் கூட்டம் மன்னார் மாவட்டத்தில் காலை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மதியம் வவுனியா மாவட்டத்திலும், பிற்பகல் யாழ்.மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. மேலும் பொது எதிரணியினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யாத நிலையில், குறித்த மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது…

Read More

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பதவியை காத்துக் கொள்ளுங்கள்: ஜோன் அமரதுங்க

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்து கொள்ளுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 15 மில்லியன் ரூபாவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சிந்தித்தாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கை உயர்ந்துங்கள். வரவு செலவுத்…

Read More

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு – ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அவகாசம் கோரல்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும், தனது விளக்கத்தை…

Read More

வியாழன் கிரகத்திற்கு மேல் மின்னும் ஒளிக்கோவை: நாசா தொலைநோக்கி படம் பிடித்தது

பூமியில் தோன்றும் வண்ணமிகு துருவ ஒளியான ‘அரோரா’ வியாழன் கிரகத்திலும் தோன்றியதை நாசாவின் நவீன தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. எண்ணற்ற அபூர்வ நிகழ்வுகளை உள்ளடக்கியது இயற்கை. அந்த அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான் அரோரா எனப்படும் துருவ ஒளி. அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு அந்த கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது இந்த துருவ ஒளி வெளிப்படுகிறது. பூமியில் இந்த நிகழ்வு தோன்றுகிறது….

Read More

இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை  கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…

Read More

அமெரிக்க அப்பிள்களை வாங்காதீர்கள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளது என்று ணுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பி.ஜி.மகிபொல தெரிவித்தார். இந்த வருட ஆரம்பித்திலிருந்து லிஸ்ரெறியா மனோசைரோஜஸ்…

Read More

சிரியாவில் உள்ள Islamic States (IS) மீது தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானம்..!

ஈராக் மற்றும் சிரியாவில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு பல நகரங்களை கைப்பற்றியுள்ள அவர்கள் ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். சிரியாவில் போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலேவை பிடித்து வைத்து பிணை தொகை கேட்டு பேரம் பேசினர். அவற்றை தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது. எனவே அவரை தலை துண்டித்து கொலை செய்தனர். அந்த வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தினர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்’…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டை முறைமை சிறந்தது: பிரதமர்

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தகவல்களை திரட்டும் போது நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதுகாப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய அடையாள அட்டையின் ஊடாக நாடு மக்களும் பாதுகாக்கப்படுகின்றனர். இன்று பலர் பல்வேறு தேவைகளுக்காக சாரதி அனுமதிப் பத்திரத்தையே சமர்ப்பிக்கின்றனர். ஆட்பதிவு திணைக்கதளத்தின் ஊடாக தரவுத் தளமொன்று உருவாக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Read More

சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படும் போது அங்கு ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த முடியுமென்றும் கிராமங்களிலே உள்ள மதத் தலைவர்கள், பெரியார்கள் மற்றும் சிவில் சங்கங்களை இணைத்து இவற்றை தடுப்பது…

Read More

சோபித தேரர் காலமானார்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – சிறந்த சமயத் தலைவர் சோபித தேரரர் காலமானார். இலங்கை மக்களுக்கு பாரிய இழப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட மாதுருவாவே சோபித தேரர் இன்று (08) காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலையில் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல காலமாக  இலங்கையில் சர்வாதிகார ஆட்சி முழ நாட்டு மக்களையும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில்…

Read More

காலி கூட்டத்தில் மஹிந்த

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள…

Read More