Headlines

ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது

லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே…

Read More

பயாகலைப் பகுதியில் நடந்த சம்பவம் : மக்களே எச்சரிக்கை.!

பயாகலை  முதல் மக்கொனை வரையான கடல் எல்லையில் கடல் அலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் இப்பகுதியில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பயாகலைப் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர். கடந்த 22 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பகுதி கடலில் நீராடிய  இரு இளைஞர்கள் மக்கொனை, பயாகலைப்  பகுதிகளில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். தென்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் கடலில் நீராடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.

Read More

ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை 21 ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்றால் போல் தயா­ரிக்க உள்ளோம். இதன்­போது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே பெரும் முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டுவோம். நான் ஒரு இலங்­கை­யன். இந்த நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்கமாட்டேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள். ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கமாட்டோம். மக்­களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்­பு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­ கோ­ரு­கின்றேன். உலக வர­லாற் றில் முதல்…

Read More

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம் காசிம் – வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ” மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின் போதே…

Read More

தேசியக் கூட்டுறவுக் கொள்கை அமைப்பது தொடர்பான பயிற்சிச் செயலமர்வு: அமைச்சர் றிஷாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கூட்டுறவு சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டனர். தேசிய…

Read More

சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு

சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.

Read More

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்” கண்டியில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (20) கலந்துகொண்டார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், சமுதாயப்…

Read More

“மர்ஹூம் Y.L.S.ஹமீட் அவர்களின் வாழ்வும் பணியும்” நினைவுப் பகிர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் “வாழ்வும் பணியும்” நினைவேந்தல் நிகழ்வு, நாளை சனிக்கிழமை 27.01.2024, பிற்பகல் 03.45 மணிக்கு, கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புத்தளம் நகர் பகுதி மின்வெட்டுக்கு தீர்வு..

கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில் எம்மக்களுக்கு மிகுத்த அசௌகரியத்தை அளித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 21 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிக்கு இடைப்பட்ட சில நாட்களிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புனித நோன்பு பெருநாள் காலப்பகுதியில் இது எமது மக்களை சிரமப்படுத்தும் என்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் (25). வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் 25.10 2019  வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு  காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  கைத்தொழில் வர்த்தகநீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவருமாகிய அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன், விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி,…

Read More

முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?

– எம்.ஐ.முபாறக் – தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிக்கத் தொடங்கினார்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் ஓரளவு முடிவுக்கு  வந்தது.தமிழர்களின் ஓரிரு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. அதேபோல்,இந்த வருடத்துக்குள்  அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையால்  இந்த வருடத்தையும் மேலும் நம்பிக்கையூட்டும் வருடமாக  சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.அது அனைத்து இன…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து…

Read More