கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதை அடித்தளமாக கொண்டு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி வரவேற்றுள்ளது. இது குறித்து நன்றி தெரிவித்து நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட…
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த சிலர் இன்று (3) நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோரில் 145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர்களில் 100 பெண்கள் அடங்குகின்றனர். அத்துடன், டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 30 பேர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவிலிருந்து 15 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள்…
திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும்…
இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயகௌரவம், பல்வகைத் தன்மை போன்றவற்றை நோர்வே அரசாங்கம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் கடும்போக்குடைய அமைப்புக்களை ஊக்குவிப்பதாகவும், இன முரண்பாடுகளை தூண்டுவதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையில் முரண்பாடுகளை…
புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முசலியில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டமானது, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனே வழங்கப்படுகின்றன என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் தெரிவித்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 7௦௦ வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார், முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, ‘’முசலியிலே நடைபெறுகின்ற இந்த வைபவத்தினை ஒரு…
நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா…
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு…
2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…