Headlines

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருகோணமலை ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கான புதிய கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது!!!

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில் இடம் பெற்ற புதிய ஆய்வு கூடத்தை இன்று (01) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் கலாசார ரீதியாக உற்சாக வரவேற்பளித்தார்கள். கல்வி அமைச்சின் “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டம் 2016-2020 திட்டத்தின் கீழ் குறித்த ஒரு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட…

Read More

பொது தேர்தலின் பின்னர் ஐ.தே.க. நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்: பிரதமர் ரணில்

பி. முஹாஜிரீன் ‘எதிர் வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகவின் அழைப்பின் பெயரில் (05) ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதம ரணில் விக்ரமசிங்க அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வை அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…

Read More

எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக்கும் திட்டம் மிக மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு உஷாரடைந்து விடாமல் இருப்பதற்காக திட்டங்கள் மிகமிக கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நகர்வு தொடர்பான அனைத்துத் தொடர்புகளுக்கும் செய்மதித் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்மதித் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது கடினமானது என்பதால் அரச புலனாய்வாளர்களை ஏய்ப்பதற்கு இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

Read More

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் இணக்கம்

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு,…

Read More

பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை வழங்க இஷாக் ரஹுமான் எம்.பி முயற்சி!

-அஸீம் கிலாப்தீன்- அனுராதபுரம், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட அ / நொச்சியாகம, அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்டகாலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு, அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்குகிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற இப்பாடாசாலைக்கும், அருகில் இருக்கின்ற சிங்கள மொழி மூலமான பாடசாலைக்குமிடையில் மிக நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை காணப்பட்டது. இதனால் அல்-ஹிக்மா பாடசாலை…

Read More

பதிவு செய்யப்படாத தொலைபேசி வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பு

பதிவு செய்யப்படாமல் உள்ள கைத்தொலைபேசி மற்றும் தொலைபேசி உபகரணங்கள் விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதத்தின் இறுதியில் நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களை பதிவு செய்வதற்கு 3 மாதம் கால எல்லை வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல வர்த்தக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை பதிவு…

Read More

படை வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு

யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டது.

Read More

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…

Read More

தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது. கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை…

Read More

அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில்…

முந்தனை ஆறு , மூக்கிரையான்ஓடை , விலால் ஓடை அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று  25.09.2019 மாவட்ட  மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பணிப்பாளர் நாயகம் நீர்ப்பாசனம் மோகன்ராஜ், முந்தயன் ஆறு திட்டப்பணிப்பாளர் சமன், பிரதி பணிப்பாளர் நிஹால் ஸ்ரீவர்த்தன, மாவட்ட பணிப்பாளர் அஸ்ஹர், நீர்பாசன  அதிகாரிகளும் மற்றும் கமநல சேவை திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எதிர்வரும் 05.10.2019 ஆம் திகதி இவ் மூன்று…

Read More

பரிந்துரைகள் பாரதூரமானதாக அமையாது பிரதி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் விசா­ரணை அறிக்­கையில் பார­தூ­ர­மான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டாலும் பரிந்துரைகள் பார­தூ­ர­மாக அமை­யாது. பார­தூ­ர­மான அத்­து­மீறல் விசா­ரணைகள் வலி­யு­றுத்­தப்­படமாட்­டாது என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது என பிர­திவெளி­வி­வகார அ­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக சந்­தே­கங்­களை தீர்க்க அர­சாங்கம் செயற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கை­ மீ­தான விசா­ரணை அறிக்கை பார­தூ­ர­மான வகையில் அமையும் என…

Read More

பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு…

Read More