Headlines

விடத்தல் தீவு மற்றும் பெரிய மடு பிரதேசங்களுக்கு தவிசாளர் செல்லத்தம்பு விஜயம்!




மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களுக்கு மன்னார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேசபையின் தவிசாளர் செல்லத்தம்பு ஐயா நேற்று (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

விடத்தல்தீவு கிராமத்திற்கு விஜயம் செய்த தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஆதிர், பேடினற் ஆகியோரைச் சந்தித்து, கிராமத்தின் உள்ளக  வீதிகளின் புனரமைப்பு பணிகள்  தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் உதவியுடன் அளவிடப்பட்டது.

இதேவேளை, பெரியமடு பகுதிக்கு விஜயம் செய்த தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் தெளபிக், பிரதேச சபை உறுப்பினர்களான நைசர், நந்தன், நெளபீல் ஆகியோருடன் பெரியமடு விளையாட்டு மைதானததை பார்வையிட்டதுடன். மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் தவிசாளர் தெரிவித்தார்.

அத்துடன், பெரியமடு பள்ளிவாயலில் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்விலும் தவிசாளர் செல்லத்தம்பு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ஐ)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *