தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2016 பரிசுகளுக்கான விண்ணப்பப்படிவம் கோரல்
https://goo.gl/HkMwjY
https://goo.gl/HkMwjY
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.முஜாஹிர், செய்யது அலி முகம்மது நயீம் மற்றும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு இக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே சொல்லப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். நானும் எனது கட்சியும்…
மும்பை ஷாலிமார் ஹோட்டல்-தெற்கு மும்பையில் அமைந்துள்ள சுவையான உணவுகள் கிடைக்கும் பெரிய உணவகம் பயனுள்ள கல்வியுடன் மார்க்க கல்வியையும் போதிக்கும் ஷஃபா-மாறுபட்ட பள்ளிக்கூடம். இவற்றை வெற்றிகரமாக நிர்வகிப்பவர் ஒரு முஸ்லிம் பெண் ஆவார். அதுவும் நிகாப் எனும் முகத்தை துணியால் மறைக்கும் முஸ்லிம் பெண். வாருங்கள் இஷ்ரத்தை சந்திப்போம். 42 வயதான கணவனை இழந்த கைம்பெண்ணாக 5 பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்தும் இஷ்ரத், மிகவும் வெற்றிகரமாக பெரிய உணவகத்தையும், பள்ளிக்கூடத்தையும் நிர்வகித்து வருகிறார். உ.பி.மாநிலம் ஆஸம்கரை சார்ந்த…
அண்மையில்களுமுந்தன்வெளி யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தேவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 4 லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கண்ணன், முஸ்தபா கலீல், சித்திரவேல் மற்றும் பயனாளிகளும் கலந்து…
இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரமாக படகில் பரிதவித்த 44 இலங்கைத் தமிழர்கள் தரையிறங்க அந்த நாட்டு அரசு நேற்று(18) அனுமதி அளித்தது. கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இன்ஜின் கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோனேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள்…
கொல்கத்தாவில் தாடி வைத்திருப்பதற்காக முஸ்லீம் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரஙகப் பிரிவின் ஜெனரல் மேனேஜர்(பொது மேலாளர்) ஆக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர் முகமது இஸ்மாயில். அவர் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செய்துவிட்டு மே மாதம் தாடியுடன் நாடு திரும்பினார். அதன் பிறகு அவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை பாதி சம்பளத்தை பெற்று பணியாற்றியுள்ளார் இஸ்மாயில்….
மௌலவி செய்யது அலி ஃபைஜி நபிகள் நாயகம்ம் அவமதித்து கேலி சித்திரம் வரைந்த சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் மனம் திருந்தினார் இனி நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்றும் அறிவித்தார். சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டை சார்ந்த கேலி சித்திர பத்திகை 2006 ஆம் ஆண்டில் இருந்தே நபிகள் நாயகம் தொடர்ப்பான பல்வேறு கேலி சித்திரங்களை வரைந்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தது அனைவரும் அறிந்த விசயம் இந்த…
இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வே சமூகத்துக்கான பாதுகாப்பையும் இருப்பையும் நிலைப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனின்’ ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், மன்னார், கொண்டச்சியில் நேற்று (29) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “வன்னி மாவட்டத்தில் சிதைந்துபோய்க் கிடந்த தமிழ் – முஸ்லிம் உறவை துளிர்க்கச் செய்து, அதனை வலுப்படுத்துவதில் மக்கள் காங்கிரஸ்…
ரமழான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஸகாத்’ எனப்படும் தான-தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமழான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மஸ்ஜித்கள் , மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 70 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் பெண் ஒருவர்….
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ‘இஸ்லாமிக் ஸ்டேட், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த இயக்கத்தில் சேருவதற்கென்றே பல வெளிநாட்டினர் ’உம்ரா’ செய்வதாக விசா…
இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும்,…