Headlines

ரஷ்யாவின் மற்றுமொரு விமானம் விழுந்து பலர் பலி

சென்றவாரம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்தை தொடர்ந்து சற்றுமுன்னர் ரஷ்யாவுக்கு விமானம் ஒன்று தென் சூடானில் விழுந்ததால் அதில் பயணம் செய்த சுமார் 40 பேர் உயிரிந்துள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் குறிபிட்ட விமானத்தில் பணியாளர்களுடன் 20 பேர் இருந்ததாக சூடான் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்து இருந்தாலும் நாற்பது பேரின் உடல்களை அங்கிருந்து அகற்றியதாக ராய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இருவர் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கடுகிறது.

Read More

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிவாசல்

ஆப்பிரிக்காவில் ஒரு ஏழை கிராமத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட இறையில்லம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்றைய மதினா மஸ்ஜிதுன் நபவியும் இவ்வாறு ஓலை குடிசையிலே கட்டப்பட்டது. அல்லாஹ் இந்த கிராம மக்கள் மீது நிறைந்து அருள் புரிவானாக….!!

Read More

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை!!!

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் களத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு திரும்பிய அமைச்சர் காலிக்கு விரைகிறார் கட்டுங்கடங்காத நிலைமையில் போய்க்கொண்டிருக்கும் காலி ஜிந்தோட்டை வன்முறைகளை உடன் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சற்று நேரத்துக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் இராணுவம் மற்றும் அதிரடிப்படைகளை களத்தில் இறக்கியுள்ளார். ஏற்கனவே காலி மாவட்டத்தைச்…

Read More

“வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்” அமைச்சர் பொன்சேகாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்! 

-எப்.சனூன்- வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே,…

Read More

இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெற்காசிய நாடுகளின் சமூத்திரக் கண்காணிப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் பிரதமர், இதற்குத் தேவையான திட்டங்களை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Read More

இந்தியாவின் புத்தகயா மீதான தாக்குதல் கண்டிக்கத்தகது-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மொரீஸியஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். மதங்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றன.அகிம்சை,கருணை,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் என்பதை எடுத்துயியம்பிவரும் மதங்கள்,ஒரு போதும்,பிரிவினை வாதத்துக்கும்,இன முரண்பாடுகளுக்கும் வித்திடுமாறு கோறவில்லை என்பதை…

Read More

மகிந்தவின், குடியுரிமை இரத்தாகும் – ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது சுனாமி அனர்த்தம் காரணமா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகலில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா

– டீன் பைரூஸ் – காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் இரண்டாவது வெளியீடாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் இடம்…

Read More

லங்கா சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் இலாபத்தில், அமைச்சர் றிஷாத்  தெரிவிப்பு

கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இந்த இந்த விடயத்தை தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் இலாபம்…

Read More

இளைஞர்களை முன்னேற்ற நீங்கள் செய்யும் பனி பாராட்டப்பட வேண்டிய ஒன்று

வவுனியா அல் மதார் விளாயாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை  வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக விளையாட்டு மற்றும் கல்வி போன்ற விடயத்தில் விசேட கவனம் கொண்டு செயட்படும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வன்னி மாவட்டத்தில் இயங்கும்  இளைஞர் கழகங்களுக்கு “விளையாட்டு உபகரணம் சீருடை மற்றும் பாதணிகள்” வழங்கும்  திட்டத்திலேயே வவுனியா…

Read More

பிறந்தநாள் கேக்கை அனுமதியின்றி சாப்பிட்ட சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம்

மேரிலாந்தில் அனுமதியின்றி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 9 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு வாஷிங்டனுக்கு அருகில் ஹாகர்ஸ்டவுன் என்ற பகுதியில் வசிக்கும், ஜாக் கிரேசியா என்ற சிறுவன், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த பிறந்தநாள் கேக்கை திருட்டுத்தனமாக சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாயின் ஆண் நண்பர் ராபர்ட் வில்சன் (30), ஜாக்கை கைவிலங்கிட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி அச்சிறுவனின், தாயாரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில்,…

Read More

பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!

அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும்…

Read More