Headlines

தர்கா நகர் சாதனையாளரை கெளரவித்த அமைச்சர் ரிஷாட்!

மதீனா முனவ்வராவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிராஅத் போட்டியில், சர்வதேச மட்டத்தில் 03 ஆம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த, தர்கா நகரை சேர்ந்த அல் ஹாஃபிழ் அல் காரி அல் ஆலிம் அஹமத் ஹலீமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டி கௌரவித்தார்.  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று வியாழக் கிழமை (18) இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை தொகுதி அமைப்பாளரும்,…

Read More

இலங்கையில் போலியோவை ஒழிக்க முடிந்தது எவ்வாறு? பிரதமர் உரை

இலங்கையில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை எனவும், இரண்டு தசாப்தங்களாகவே நாட்டில் போலியோ நோயாளிகள் பதிவாகவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் நாட்டில் போலியோவை ஒழிக்க முடிந்துள்ளதாகவும், இதற்கு ரொடரி அமைப்பின் உதவியே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 107வது ரொடரி இன்டநெசனல் மாநாட்டில் (Rotary International Convention) கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறியதாவது, 1995ம் ஆண்டு…

Read More

சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்

முகம்மட் பஹாத் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார்.

Read More

டொனால்ட் டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு

முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

அரசியல் வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் – இஸ்மாயில்

எம்.வை.அமீர் நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் 2015-08-01 ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் சென்ற சில…

Read More

எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர்….

–    இர்ஷாத் றஹ்மத்துல்லா – எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம்…

Read More

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.  

Read More

குரங்கு ஆப்பிழுத்த கதையாக மாறிய ஆனந்த தேரரின் விவாதம்!

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முஸ்லிம் சமுகத்தினை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு அமைச்சர் றிஷாதின் தொலைக்காட்சி மோதல் முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மக்களால் நோக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் இரவு ஆனந்த தேரர் வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீனை வீண் வம்புக்கு இழுத்து தகுந்த ஆதாரங்களுடன் அவர் கொடுத்த பதிலடிகள் குரங்கு ஆப்பிழுத்த கதையாக ஆனந்த தேரரை திக்குமுக்காட வைத்ததையும் தெனைத் தாங்கிக் கொள்ள முடியாத தேராத் இனவாதக் கருத்துக்களையும், றிஷாதின் குடும்பங்களையும் இழுத்து சம்பவத்தை…

Read More

சவூதி அரேபியாவில் நாயை கொடுமைப்படுத்தியவர்களுக்கு 5 வருட சிறை

இரண்டு சவுதி இளைஞர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் நேரத்தைப் போக்க தங்கள் வீட்டு நான்கு சக்கர வாகனத்தில் ஏறி ஒரு நாயை விரட்டிக் கொண்டு சென்றுள்ளனர். விரட்டியதோடு அல்லாமல் 10க்கும் மேற்பட்ட முறை அந்த நாயை வாகனத்தில் மோதவிட்டு அது வலியில் குலைப்பதை ரசித்துள்ளனர். முடிவில் அந்த நாய் இறக்கும் வரை தொல்லைபடுத்தியிருக்கின்றனர். ஒருவன் காரை ஓட்ட மற்றொருவன் தனது மொபைலில் அதனை படமாக பிடித்துள்ளான். படமாக எடுத்ததோடு மட்டுமல்லாது அதனை இணைய தளத்திலும் பரவ விட்டுள்ளான்….

Read More

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் சாதனை

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நடவடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசணையின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விஷேட முற்றுகை பிரிவை ஸ்தாபித்தார்.

Read More

மினாநகர் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, மினாநகர் பள்ளிவாசலின் சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மக்கள் தொடர்பு அதிகாரி மெளலவி தாஹிர், வவுனியா நகர சபை உறுப்பினரும், இணைப்பாளருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம், பிரதேச சபை வேட்பாளர் மன்சூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்….

Read More

SLTJ யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வு மாற்று மத நண்பர்கள் புகழாரம்

நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம க்ரீன் வீச் ஹோட்டலில் வைத்து இதே நிகழ்ச்சி நடைபெற்ற போது, பொது பல சேனாவின் காடையர்கள்…

Read More