ஒரு மா நகர சபை உறுப்பினரை விட வலுவிழந்தவர்களா சம்மாந்துறை அரசியல் வாதிகள்..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை பொருளாதாராத்தில் நெல் விவசாயச் செய்கையே பிரதானமாக கொண்ட ஒரு ஊராகும்.அண்மையின் கிழக்கு மாகாணமே வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்கும் அளவு மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக விவசாயக் காணிகள் சிலவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.அன்று மழை நீரினால் பாதிக்கப்பட்ட காணிகள் வெள்ளம் வடிந்து இரண்டு கிழமைக்குள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இது அதிகாரிகளின் அசமந்தப் போக்கில்லாமல் நீர்த் தட்டுப்பாடு போன்ற நொண்டிக் காரணங்களை கூற இயலாது. கல்முனை மா நகர சபை…
