Headlines

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம்செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும்கிடையாது. மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது எனநம்புகின்றோம். புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால்மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால்

சர்­வ­தேச தரத்­தி­லான விசா­ர­ணை­யையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு அறிக்கை கலப்பு நீதி­மன்றம் என்ற பெயரில் வலி­யு­றுத்­தி­யுள்­ளதே தவிர இது சர்­வ­தேச விசா­ர­ ணை­யல்ல என்று தெரி­வித்­துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக நெடுஞ்­சா­லைகள் மற் றும் பல்­க­லைக்­க­ழகக் கல்வி தொடர்­பான அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை…

Read More

கீழே கிடப்பதை எடுக்காதீர்கள்

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெடித்து சிதறியவற்றை எடுக்கவே வேண்டாம் என்று  இராணுவம் அறிவித்துள்ளது. சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெடிக்காத வெடிபொருட்களும் கீழே கிடக்கலாம் என்பதனால், அவ்வாறானவற்றை எடுக்காது 0113818609 என்ற தொலைபேசி இலக்கத்து அறிவிக்குமாறும் இராணுவம் அறிவித்துள்ளது.

Read More

அந்த வார்த்தை திடீரென எனக்குத் தெரியாமலே வந்துவிட்டது

நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தகாத வார்த்தைகளால் எசியமை, நான் தெரியாமல் செய்த தவறாகும். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தை திடீரென வந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் அதை தெரிந்தே சொல்லவில்லை’ என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார கூறினார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வாசுதேவ, ‘தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை நம்பிக்கையில்லாப் பிரேரணையின்…

Read More

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

கட்சித் தாவல்கள் இந்தமாத இறுதிவரை ஒத்திவைப்பு

ஆளும் மற்றும் எதிரணி தரப்பினரின் கட்சி தாவல்கள் இம்மாத இறுதி வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசில் உள்ள அரைவாசியினர் தமது பக்கம் வருவர் அப்படி வரமுடியாதவர்கள் அங்கு இருந்துகொண்டே தமக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் 20 தொகுதி அமைப்பாளர்கள் அரசுடன் இணைந்துக்கொள்வர் என்று திஸ்ஸ…

Read More

“வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்” பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் அவசரக் கோரிக்கை.

-ஊடகப்பிரிவு- வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று (20/11/2017) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பள்ளிவாசலுக்குச் சொந்தமான அந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தியதன் பின்னணியில் இந்த நாசகார செயல் இடம்பெற்றுள்ளது எனவும், இது தொடர்பில் பள்ளி நிர்வாகம் ஏற்கனவே வவுனியா பொலிஸ்…

Read More

கூகுள் தேடுபொறியில் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic  என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை பார்வையிட முடியும். இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த…

Read More

பரீட்சைக்கு தயாராகவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு!

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையையும் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் ஆகிய எம்.எஸ்.எஸ்அமீர் அலி தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் உயர்தர பரிட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…

Read More

போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு : ஜனாதிபதி

எமது நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரச நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

பதியப்படாத விமானத்தை பயன்படுத்திய சஜின்வாஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான கொஸ்மோஸ் லங்கா நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானத்திற்கு பதிவுச் சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகின்றது. போயிங் 727 ரக விமானத்தை சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான நிறுவனம் பயன் படுத்தி வந்துள்ளது. இந்த விமானம் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை கொள்வனவு செய்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த விமானம் ஏரோ லங்கா என்ற பெயரில் இரத்மலானை…

Read More

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் இன்றைய கலந்துறையாடளின் போது..

இன்று 22.03.2017 ஆம் திகதி   கிண்ணியா பிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள  டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன்  அழைப்பின் பேரில்  உள்ளூராட்சி மாகாண கௌரவ  அமைச்சர் பைஷர் முஸ்தபா கிண்ணியா விஜயம் இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள்   பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர், கௌரவ உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More