Headlines

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – வெருகல் பிரதேசத்தில் ஆரம்பம்!

43 வது, 44 வது, 45 வது, 46 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்தின் வேண்டுகோளுக்கிணங்க, வெருகல் பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 43 வது வேலைத்திட்டம் – இலங்கை…

Read More

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று (28) ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, வன்னி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு மொட்டுக் கட்சியினரின் தேர்தல் அடாவடித்தனங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை களமிறக்கியதால் வந்த வினையே இது….

Read More

முஸ்லிம்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் – ஹசன் அலி

முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது. அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை…

Read More

இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்றுவரை (05.11.2017) 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 25கிலோவிற்கு மேற்பட்ட…

Read More

ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்

முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 நடைபெறும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி (2018) நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Read More

யூன் 15ற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பியுங்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடு முழுவதிலும் பாடசாலைகளினூடாக 4 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு முறையாக விண்ணப்பங்களை நிரப்பி யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்….

Read More

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.. ஸ்திரமான ஆட்சிக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கும் – அமைச்சர் ரிஷாட்  

  உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை…

Read More

1 கோடிக்கு விலை போன தாய்

உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். அதாவது குயாங்கானை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல…

Read More

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Read More

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், ரோடுகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் பீகான் மனு பகுதியில் பிங்க்னீ தெருவில் உள்ளது. அங்கு அவரது வீட்டின் முன்பு அதிக அளவில் பனி கொட்டிக்கிடந்தது. அதை…

Read More