Headlines

மீண்டும் நாளை கூடும் கோப்குழு

பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் (கோப்குழு) பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவானது தனது விசாரணை நடவடிக்கைகளுக்காக மீண்டும்  நாளை கூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்திநெத்தி தேசிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பதவிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய பிணைமுறி விற்பனை மோசடி குறித்து கோப் குழுவில் அங்கம் பெறும் எமது குழுவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்து…

Read More

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அமீரகத்தின் பெண் விமானி மர்யம் மன்சூர்

சையது அலி பைஜி  இஸ்லாம் பெணணுரிமைகளை பறிக்கிறது என புலம்பிகொண்டிருக்கும் பாண்டே கூட்டத்திர்கு மரண அடி தரும் விதத்தில் அமைகிறது இதோ நீங்கள் பார்க்கும் படம் ஆம் அமீரகத்தை சார்ந்த மர்யம் மன்சூரை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள் அவர் இஸ்லாமிய பெண் விமானி அதுவும் போர்விமானங்களையே திறமையுடன் செலுத்தும் ஆற்றல் பெற்றவர் ஆசிபத்துல் ஹஸ்மு யுத்தத்தில் அமீரகத்தின் போர்விமானங்களை ஒட்டி செல்லும் முக்கிய பணியை செய்துவருகிறார் இஸ்லாம் பெண்ணுரிமைகளை பறிக்கிறது என புலம்பி அலையும் பாண்டே…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமர் முன்வைத்ததாக அவர் கூறினார். அதன்படி விரைவில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்!!!

இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தம்புள்ளை வர்த்தகர்களுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டார் . தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தகர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் இந்த சந்தர்ப்பங்களின் போது பொலிசார் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக கவலை தெரிவித்தனர். அமைச்சர் இங்கு…

Read More

திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் சத்தியபிரமாணம்

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர். நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர அம்பகமுவ, பீ.கே.எல்.வசந்த பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் பொகவந்தலா ஆகிய மூவரே நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

Read More

துறைமுக முன்னாள் தலைவருக்கு பிணை!

துறைமுகத்தின் முன்னாள் தலைவரான பிரியத் பந்து விக்கிரம இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த தலைவருக்கும்,மேலும் இருவருக்கும் எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

Read More

கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார  சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச,  அமைச்சா் கபீா் காசீம், பிரதியமைச்சா்  சம்பிக்கா பிரேமதாச ஆகியோறும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

Read More

ரஷ்ய நூலகத்தில் பெரும் தீ விபத்து: ஒரு மில்லியன் அரிய ஆவணங்கள் சேதம்

ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனத்திற்கு (ஐஎன்ஐஓஎன்) சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 21500 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த…

Read More

ஆபிரிக்க நாட்டு மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் ஒரு மில்லியன் கையுறைகள் அனுப்பிவைப்பு

ஆபிரிக்காவில் எபோலாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் பங்களிப்பாக, ஒரு மில்லியன் சத்திரசிகிச்சைக் கையுறைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (செப். 18) அலரி மாளிகையில் வைத்துக் கையளித்தார்.

Read More

புதிய கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்! பிரதமர்

நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சிறந்த தலைவர்கள் உருவாவதற்கு காரணமாக அமைவது கல்வியாகும். இந்த கல்வியை மேம்படுத்த புதிய கொள்ளைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர்…

Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்   துணுக்காய், மாந்தை கிழக்கு, ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

Read More