Headlines

தனித்து போட்டி – சவால் விடுத்த நாணயக்கார

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் விரைவான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இதுவரையில் தெளிவு படுத்தப்படவில்லை என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்ப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவ்வளவு அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணம் என்னவென அவர் கேள்வியெழுப்பினார். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த சட்ட மூலமானது முன்கூட்டியே விவாதித்துள்ளதுடன் சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அவசியத்தை அரசாங்கம் வெளிப்படுத்த…

Read More

சவூதியில் WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி !

சவூதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளது தொலை தொடர்பு துறை. ஆனால், இது நிரந்தரமாக இருக்குமா போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. UAE போன்ற மற்ற நாடுகள் இந்த தடையினை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read More

ஏறாவூர் லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் பரிசளிப்பு விழா!

ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான M.S.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களை வாழ்த்தி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

Read More

மஹிந்தவிற்கு தேரர்கள் படை பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 100 தேரர்களை இணைத்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முறுத்துட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (6) கொழும்பில் இடம்பெற்ற தேரர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

Read More

மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப ஜனாதிபதி அறிவுரை!

மேல்மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புமாறு மேல்மாகாண சபையின் கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேல்மாகாணத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக 2014ம் ஆண்டு பரீட்சை ஒன்று நடைபெற்றதாகவும், ஆனால் குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதுவரை ஆசிரியர்களாக நியமிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நவீன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த ஜப்பான் இணக்கம்

120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள My Number எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் Fukuda Sensai நேற்று முந்தினம்(26) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை…

Read More

வெள்ளிமலை பொது மையவாடிக்கு சுற்றுவேலி அமைக்க நிதி ஒதிக்கீடு!

மன்னார், முசலி, வெள்ளிமலை அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வெள்ளிமலை மையவாடிக்குப் பாதை அமைக்க நிதி ஒதிக்கீடு செய்தார். பாதைக்கான வேலைகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் பொது மையவாடியினை அடையாளப்படுத்தும் நோக்குடன், கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுவேலி அமைப்பதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம், அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த நிலையில், தற்போது மாகாண சபையின் ஊடாக சுமார் இரண்டு இலட்சம் ரூபா…

Read More

2 அடி நீளமும் 34 கிலோ எடையுமுடைய உலகின் மிகப் பெரிய முத்து

2.2 அடி நீள­மான பாரிய முத்து ஒன்றை பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வைத்­தி­ருக்­கிறார். இது, உலகில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய முத்து எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பிலிப்­பைன்ஸின் பலவான் தீவின் கடற்­க­ரை­யொன்றில் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேற்­படி மீனவர் இந்த முத்தை கண்­டெ­டுத்தார். இதன் பெறு­மதி சுமார் 10 கோடி அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 1,546 ரூபா) எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மீனவர் இந்த முத்தின் பெறு­ம­தியை உண­ர­வில்லை. இம் ­முத்தை தனது அதிஷ்டப்…

Read More

சேலை அணியத் தேவையில்லை

தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

4 இலங்கை மாணவர்கள், குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு

குவைத் கல்வி அமைச்சினால் இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக நடாத்தப்பட்ட உயர் தரப் பரீட்சையில் நான்கு இலங்கை மாணவர்கள் குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான பஸால் முஹம்மத் முளப்பர் ,  பயாஸ் முஹம்மத் மஹ்ரூப்,அஷ்ரப்  முஹம்மத் அக்ரம், ஷஸான்  முஹம்மத்   பியாஸ்  ஆகியோரே இந்த மாணவ நட்சத்திரங்களாவர்.  அண்மையில் நடந்த 2013 / 2014 கல்வியாண்டுக்கான பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டதாலேயே இந்த நான்கு  இலங்கை…

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பாக அறிவுறுத்தலுடன்,துஸ்பிரயோகங்களின் போது சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முறைகள் தொடர்பான நடவடிக்கைகயை அறிமுகப்படுத்தல் என்பனவே இந்த கொள்கைகள் தயாரித்ததன் நோக்கம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தேசிய மற்றும், மாகாண சபை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவளை சிறுவர் பாதுகாப்பு…

Read More

கொகா கோலாவுக்கு மன்னிப்பு!

கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின்…

Read More