Headlines

காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி, காத்தான்குடி, கர்பலா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்களை ஆதரித்து இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மு.கா ஆதரவாளர்கள் சிலர் மக்கள் காங்கிரஸில்  இணைந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் நகர சபை உறுப்பினர் முகைதீன் சாலி, முன்னாள் நகர சபை உறுப்பினர் மாஹிர், மத்திய குழு செயலாளர்…

Read More

எதிர்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமனம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது  பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு  ஜயசூர்ய அவர்களால்  நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Read More

மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?

சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது. மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம்…

Read More

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் துரித அபிவிருத்திக்காக 12 கோடியே 96 இலட்சம் ரூபா நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார். மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்கவே, அமைச்சரின் விஷேட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபை இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிருவாகத்தின் கீழ் வந்துள்ளதை அடுத்து, அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் முஜாஹிர், மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் குறைபாடுகளையும், மக்களின்…

Read More

கொண்டச்சி கிராம மக்களுக்கு அமைச்சர் றிஷாதின் உதவியில் வீடுகள் நிர்மாணிப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முழுமையாக பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி கிராம மக்களுக்கு, அமைச்சர் றிஷாத் தனது சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டு மன்னார் கொண்டச்சியிலிருந்து வெளியேறி, புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த இந்த முஸ்லிம் மக்கள், சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். தாம் வாழ்ந்த பூர்வீக கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளைத் துப்புரவாக்கி, மீண்டும் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த…

Read More

முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம் 

நிதியமைச்சின் கருத்திட்டத்தில் உருவான ‘என்டப்பிரைஸ் சிறீலங்கா’ எனும் திட்டத்தின் அடிப்படையில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் நடைமுறையின் அங்குரார்ப்பண நிகழ்வு நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரினால் இன்று (21) முல்லைத்தீவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More

இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து பாராமுகமாக இருக்கக்கூடாது!

நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (16.05.2017) நண்பகளலவில் விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர் வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பு அதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறு வேண்டினார். புனித றமழான் நெருங்கும் போது இனவாதிகள் இவ்வாறான குழப்பத்தை உருவாக்கி சமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டதை கடந்தகால வரலாறு. அந்த பின்னணியிலேயே வெல்லம்பிட்டி…

Read More

ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்துள்ளார். இதைக்கண்ட ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு நபர் நடமாடுகிறார் என போலீசில் புகார் செய்து விட்டார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க போலீசார், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டனர்.அவருக்கோ ஆங்கிலம்…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய  அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார். அத்துடன் ,தற்காலிகமாக  வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட  கிராம சேவகர்களுக்கும் அமைச்சர் நிரந்தர நியமன கடிதங்களையும் வழங்கி வைத்தார்.

Read More

“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி

“எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது…

Read More

புத்தளம் நகருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் விஜயம்..

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (2017-05-16) செவ்வாய்க்கிழமை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.. இதன் முக்கிய நிகழ்வாக புத்தளம் நகருக்கான கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களின் விஜயம் அமைந்திருந்தது.. இங்கு… புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை…

Read More