Headlines

உளறித் திரியும் ஞானசார!

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர். சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது….

Read More

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுமாறும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன். வெள்ளத்தின் காரணமாக அழிவுக்குள்ளானோரின் சொத்துக்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் அரசையும் வேண்டியுள்ளார். “பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மாத்திரமன்றி மழைநீர் காரணமாக நிரம்பிய…

Read More

சவூதியிடமிருந்து 30,000 அல்குர்ஆன் மற்றும்  கிதாபுகள்(படங்கள்)

சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது. இதில் சவூதி அரேபிய பிரதி நிதி, சவூதிஅரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர்,…

Read More

பாடசாலை ஆதிபருக்கு விளக்கமறியல்!

கண்டி – கன்னொறுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற அதிபரையும் ஆசிரியரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 51 வயதுடைய அதிபரும் 42 வயதுடைய ஆசிரியருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய 1 ஏபீ தரப் பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். கல்வி இளமாணி (சிறப்பு), கல்வி முதுமாணி, விசேட கல்வி டிப்ளோமா, விவசாய டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2010 ஜனவரி முதலாம் திகதி…

Read More

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 05 பாடசாலைகளுக்கு இரண்டு மாடிக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு!!!

பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் கேட்டுக் கொண்டதற்கிணங்க -அல் ஹிக்மா மகாவித்தியாலயம் தம்பலகமம், நிர்வாகக் கட்டடத்துடன் கூடிய 110 X 25        இரண்டு மாடிக் கட்டிடம் 02 – புல்மோட்டை முஸ்லிம் காவித்தியாலய கேட்போர்     கூடத்துடனான 120 x 40 இரண்டு மாடிக் கட்டிடம், குச்சவெளி அன் நூரியா வித்தியாலயம். கேட்போர் கூடத்துடனான 110 x 32 இரண்டு மாடிக் கட்டிடம் -மூதுார் அல் மினா வித்தியாலயம். 110×25 வகுப்பரைக் கான…

Read More

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன்…

Read More

உதய கம்மன்பில, ஞானசார தேரர் உட்பட சிலருக்கு எதிராக பிரபல சட்டத்தரணி குழு பொலிஸில் முறைப்பாடு

இன்று காலை 11 மணியளவில் பிரபல சட்டத்தரணி குழு ஒன்று,  மாற்றியமைக்கப்பட்ட தேசியக்கொடியை ஏந்தி போராட்டம் செய்த உதய கம்மன்பில, ஞானசார தேரர், மதுமாதவ அரவிந்த, மற்றும் சிலருக்கு எதிராக கறுவாத்தோட்ட போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளனர். தேசியக்கொடியை மாற்றி அமைப்பது சட்டக் கோர்வை படி தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவோம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அரசாங்கத்துக்கு சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் இன்று மாலை (04) சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே இருந்தது. தற்போது,…

Read More

ACMCயின் நன்றி நவிலும் நிகழ்வுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அனுபவப் பகிர்வும்

– அபூ அஸ்ஜத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒக்டோபர் மாதமளவில் கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளான சூறாவளி சுற்றுப் பயணத்தின் போது மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்…

Read More

சிக்கினார் நாமல் – அதிசொகுசு நடமாடும் படுக்கையறையும் சிக்கியது (படங்கள் இணைப்பு)

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது. அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பஸ்வண்டியினுள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு கறுத்த ஸ்டிக்கரால் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

Read More

மூதூரில் பசுமைக் குழு தோற்றம்

– மூதூர் முறாசில் – மூதூரில் பசுமைக் குழு( Green Committee) என்னும் புதிய அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது. மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்படவுள்ள அனல்மின்சார நிலையத்தை நிறுத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை முதன்மையான நோக்கமாகக்கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை(15) அரபா நகர் ஜும்ஆப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற சமூக மற்றும் சன்மார்க்க அமைப்புகளின் ஒன்றுகூடலின் போதே இப்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்களை உள்ளடக்கும் வகையில்…

Read More