Headlines

அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்

நிரா­யுதபாணி­க­ளாக பேரணி நடத்­திய மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்த உத்­த­ர­விட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் அத்­தாக்­கு­தலை தடுத்து நிறுத்தத் தவ­றிய உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் வலியுறுத்தினார். அத்துடன் சட்­டத்தை நிலைநாட்ட வேண்­டி­ய­வர்­களே சட்­டத்தை மீறு­வதா நல்­லாட்­சியின் விளைவு என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் கேள்வி எழுப்­பினார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய…

Read More

யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவரது ‘உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய  ஒரு தனிநிலை ஆய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு  இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார். பின்பு  ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்…

Read More

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்!

வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் கோடிசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது பல வருடமாக 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்த முறை 4ம் இடத்துக்கு பின் தள்ளி முதல் முறையாக டைப் 3 இடத்துக்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடிசுவரர்கள் அமெரிக்கா,சீனா வில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்திய கோடீசுவரர்கள்…

Read More

தெல்தெனியவில் டெங்கு அபாயம்

கடந்த சில­வா­ரங்­க­ளாக மழை பெய்து ஓய்ந்­த­தை­ய­டுத்து கண்டி, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக தெல்­தெ­னிய பொது சுகா­தார அதி­கா­ரிகள் அலு­வ­லகம் தெரி­விக்­கின்­றது. இதே­வேளை இரு டெங்கு நோயா­ளர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­லு­வ­லக சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­த­துடன் இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இது இவ்­வா­றி­ருக்க பொது சுகா­தார அதி­கா­ரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்­றா­டல்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர்.டெங்கு நுளம்­புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்­றா­டலை…

Read More

கழுத்தை அறுத்து கொள்வேன்: மஹிந்த

தான்,18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. தான் களவெடுத்ததை நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

விரைவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள தாகவும் குறிப்பிடுகின்றது. அரசியலமைப்புப் பேரவை கூடுவது தொடர் பில் கடந்த வாரத்தில் இருந்து அதிகளவில் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமளவில் பேரவை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசாங் கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பிரதமர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அரசியலமைப்புப் பேரவை கூட முடியாது போனதாகவும் அமைச்சரவை பேச்சாளர்…

Read More

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. ரெயில் என்ஜின்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை உருவாக்கி உள்ளது. இந்த ரெயில் என்ஜின் வருகிற 2017-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில்…

Read More

வற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள்

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்  என்று அரசாங்கம் தெரிவித்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு…

Read More

ரஷ்யாவின் மற்றுமொரு விமானம் விழுந்து பலர் பலி

சென்றவாரம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்தை தொடர்ந்து சற்றுமுன்னர் ரஷ்யாவுக்கு விமானம் ஒன்று தென் சூடானில் விழுந்ததால் அதில் பயணம் செய்த சுமார் 40 பேர் உயிரிந்துள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் குறிபிட்ட விமானத்தில் பணியாளர்களுடன் 20 பேர் இருந்ததாக சூடான் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்து இருந்தாலும் நாற்பது பேரின் உடல்களை அங்கிருந்து அகற்றியதாக ராய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இருவர் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கடுகிறது.

Read More

வெசாக் காலத்தில் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமில்லை விலையை வேண்டுமென்றே அதிகரித்தால் சட்ட நடவடிக்கை அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

ஊடகப்பிரிவு வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதே வேளை அத்தியாவசிய உணவுப்பண்டங்கள் இறக்குமதி மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹேமக்க பெர்னாண்டோ, சந்தையில் பொருட்கள் தாராளமாக இருப்பதாகவும் எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்தார். கடந்த வெசாக்…

Read More

07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்!!! வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்!!!

–சுஐப் எம்.காசிம்– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும், இக்குறுகிய காலத்தில் வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக் காட்டுகின்றது.  கைப்பற்றிய சபைகள் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தமாக 166 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உள்ளூராட்சி…

Read More