Headlines

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரிஷாட்

மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில்  வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைநாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதே வேளை இந்தகுண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும்மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைதெரிவிக்கின்றேன். இந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரானஅனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம்எடுக்க…

Read More

ஆபிரிக்க நாட்டு மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் ஒரு மில்லியன் கையுறைகள் அனுப்பிவைப்பு

ஆபிரிக்காவில் எபோலாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் பங்களிப்பாக, ஒரு மில்லியன் சத்திரசிகிச்சைக் கையுறைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (செப். 18) அலரி மாளிகையில் வைத்துக் கையளித்தார்.

Read More

மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், தலைமையில் மேல்மகாண மக்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துறையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் மாகாண கல்வி அமைச்சிற்கு  வருகை தந்தபோது, மேல் மாகாணத்தில் மக்களுக்கிடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Read More

விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக -இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி கேணிநகர் பகுதியில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள…

Read More

இலங்கையருக்காக அபராத பணம் வழங்கிய சவூதி

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்ட முறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த…

Read More

19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தத்துவங்கள், கடமைகள், பணிகள் என்ற உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருக்க வேண்டும். மதம் சார், இனம் சார், ஒற்றுமை பேணப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கம் மற்றும்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியாவில் வீட்டுத்திட்டம்!

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வவுனியா அண்ணாநகர் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கென நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மானிக்கும் பணிகள் இன்று (25  ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த அண்ணாநகர் மாதிரிக் கிராமங்களான படிவம் 1,2,3 ஆகிய பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய வீடமைப்பு…

Read More

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More

வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். குறிப்­பாக அரபு மத்­ர­ஸாக்­களும் அவற்­றுக்­கு­ரிய வக்பு சொத்­துக்­களும் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­ததால் மத்­ரஸா வக்பு சொத்­துக்கள் பல­வற்றில் முறை­யீ­னங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும்…

Read More

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினை றிஷாத் பதியுதீனுக்கு மாத்திரம் கடமையல்ல

மன்னார் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அது இன்று அரசியல் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஹலால் உணவில் ஆரம்பித்த பிரச்சினை படிப்படியாக நகர்ந்து சென்று இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கைவைக்கின்ற அளவுக்கு கைமீறிப் போயுள்ளது. பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன அடிப்படையில் ஆதரமற்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு செயற்பட்டது. இதற்கு ஒருசில சிங்கள ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்த…

Read More

முசலி வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு! அமைச்சர் ரிஷாட் முசலியில் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று காலை (02) முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில் கலந்துரையாடிய பின்னர், முசலி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான கூட்டமொன்றை நடாத்தினார். அக்கூட்டத்தில் தற்போது முசலியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற வீட்டுத்திட்டம்…

Read More

பொது பல சேனா வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பொது பல சேனா அமைப்பு கடந்த காலங்கள் போன்று வரம்பு மீறிச் செயற்பட்டால் தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது பல சேனா பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன என்று இணையத்தளம் ஒன்று அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ச பொது பல சேனாவின் கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க நேரிட்டு தோல்வியைத் தழுவினார் என முன்னாள்…

Read More