Headlines

கருமலையூற்று மஸ்ஜித் இருந்த இடத்தில் ஜும்ஆத் தொழுகை!




இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கையேற்கப்பட்ட கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 2014.12.19ஆம் திகதியன்று மீண்டும் ஜும்ஆத் தொழுகை இடம்பெறவுள்ளது.

நீண்ட காலத்தின் பின்பு இடம்பெறும் ஜும்ஆத் தொழுகையில் பெருந்தொகையான மக்கள் வருகை தரவுள்ளதாக பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார்.

தொன்மையான பள்ளிவாசல் உடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள கூடாரத்திலேயே ஜும்ஆ தொழுகை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-Lankamuslim-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *