Headlines

காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லாஹ்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டர் வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து நிலமை மோசமாகி வருகிறது. ஆனால் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அவர்களாக கற்பனை செய்து கொண்டு இப்படி கூறுகிறார்கள். இங்கு என்ன நடந்து கொண்டு இருப்பதை, பாரதீய ஜனதாவும், இங்கு அவர்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் உணர்ந்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு மட்டும்தான் இங்கு அமைதி நிலவுகிறது…

Read More

மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு மீண்டும் பேரிடி

-K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)- நல்லாட்சியில் முஸ்லிம்கட்கு தொடராக அடிவிழுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த யுகத்தில் முஸ்லிம்கட்கு அநியாயம் நடைபெறுவதாகவும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியே முஸ்லிம் மக்களும்,முஸ்லிம் தேசியத்தலைவரும் அரசைவிட்டு வெளியேறி மகிந்த யுகத்தை அஸ்தமிக்கச் செய்து மைத்திரி யுகத்தை ஆரம்பித்து வைத்தனர்.தமது பிரச்சினைகள் இலகுவில் தீரும் எனக் கண்ட கனவுகள் யாவும் கலைவதைக் காணமுடிகிறது. எந்த பலசேனாக்களின் அறிக்கைகளாலும், அடாவடித்தனங்களாலும் மகிந்த அரசைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டதோ, அதே பலசேனா முன்னரைவிட பலமாக தமது செயற்பாட்டைச்…

Read More

நீர்கொழும்பில் பதற்றம்!

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக…

Read More

வரவு-செலவுத் திட்டம் 2015 : 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு  ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீதின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” – தவிசாளர் அமீர் அலி!

அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மருதூர் ஏ. மஜீத் அவர்கள் கல்வித்துறையில் இலக்கியத் துறையில், கலைத்துறையில் என்று பல்கலை விற்பன்னராகத் திகழ்ந்தவர். எனக்கு மிகவும் பிரியமான ஒரு பேச்சாளர். அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் எவ்வளவு நேரம் அவருடன் உரையாடினாலும் அலுப்பு ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு திறமை மிக்க பெரியவரை நாம்…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும்” –  முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப், நேற்று முன்தினம் (09) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எமது உரிமைகளைப் பாதுகாத்து,  வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமனறம் அனுப்ப…

Read More

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு? ஊடகவியலாளர் மாநாட்டில் நிறுவனத் தலைவர் விளக்கம்.

இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியடங்கிய  கொள்கலனை,  இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த பின்னர்   களஞ்சியசாலையில் வைத்து அதனை  இறக்குவதற்கு முன்னரே வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் பொலிசாருக்கு சதொச நிறுவனம் இது தொடர்பில் அறிவித்ததாக  நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். இரத்மலான சதொச களஞ்சியசாலையில் 100 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கொக்கெயினை பொலிசார்…

Read More

சிரியாவின் நெஞ்சைப் பிழியும் சோகம்

AHAMED DEEDAT சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த…

Read More

ஐக்கிய தேசிய கட்சிக்கு சரத் பொன்சேக்காவின் ஆதரவு..??

நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்…

Read More

பலி கொடுக்கப்படவே புத்தளம் சிறுவன் பாதிர் கடத்தப்பட்டான்

இன்று புத்தளம் வான் வீதிப்பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம் சிறுவன் பாதிர் , பலி கொடுக்கப்படவே கடத்தப்பட்டுள்ளது. புதையலுக்காக ஓர் உயிரைப் பலியிடும் நோக்கிலே இக்குழந்தை கடத்தப்பட்டுள்ளது, இக்கடத்தல் விவகாரத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட ஐவர் கொண்ட குழுவொன்று இதுவரை பொலிஸாரினால் பிடிபட்டுள்ளனர், இவ்வனைத்தையும் இக்குழந்தை தனது வாக்குமூலத்தின் மூலம் தெளவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.   உறுதி செய்யப்பட்ட தகவல் By: அ(z)ஸ்ஹான் ஹனீபா புத்தளம்

Read More

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் தெரிவு இன்று

அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் இன்று பிற்பகல் 3 மணியளவில் தெரிவு அஸ்கிரிய மகா விகாரையில் இன்று இடம்பெறவுள்ளது. கலகம அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவி வெற்றிடமானதை தொடர்ந்து அவ்வெற்றிடத்திற்க்கான தேர்வே இன்று இடம்பெறவுள்ளது. கலகம அத்ததஸ்ஸி தேரர் கடந்த மாதம் 9 ஆம் திகதி குளியல் அறையில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More