Headlines

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் கருத்தரங்கு-அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

  அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஒன்று நேற்று   (21) மாலை கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி ஆலோசகர் எம்.எம்.சுகைர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.     

Read More

பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்னர் குறித்த தமது சகோ­த­ரிகள் வாழ்ந்த வீட்­டுக்கு வந்து பார்த்த போது சகோ­த­ரி­களின் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் காணப்­பட்­ட­தாக பெண்­களின் சகோ­தரர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்­த­நி­லையில் மரண விசா­ரணை இடம்­பெறும் வரை சம்­பவ இடத்தில் பொலிஸ்…

Read More

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 எண்ணெய் கிணறுகள் – விலைமனு கோர திட்டம்

நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்.

Read More

‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின்{China National Agriculture Wholesale Market Association (CAWA)} தலைவர் ஷின்ஜுன் மா  (Zengjun Ma) தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்று முன்தினம் (15)…

Read More

மோடி இன்று யாழ் விஜயம்; யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த  பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும்  நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய மோடியின் நிகழ்வு இடம்பெறும் இடங்கள் மற்றும்  அதனை அண்டிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும்  தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியோ அல்லது பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வரும்போது கூட இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. முதல் தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொள்வது…

Read More

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான் வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவற்றை கையளித்தார். இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக்…

Read More

மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளுர் மரக்கறிகள் 600 முதல் 700 வரை விற்பனையாகிறது. தம்புள்ள மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை…

Read More

அதிகமான இலங்கை பணிப்பெண்களை பணியில் அமர்த்த மலேசியா தீர்மானம்

மலேசியாவின் வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் சங்க தலைவர் அந்நாட்டு இணையமொன்றிற்கு வெளியிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பணிப் பெண்களை அமர்த்துவது இலாபகரமானது எனவும், இதுவரைகாலமும் இந்தோனேஸிய பெண்களே அதிகளவில் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றி வந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தோனேஸிய பெண்களை பணியிலமர்த்துவது அதிக செலவு விரயமாகும் காரணத்தினாலேயே வேறு நாட்டு பெண்களை பணியிலமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு சந்திரிகா

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது NULL

Read More

குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் மக்கள் காங்கிரஸ் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு!

குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான  அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில், நன்னீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவருமான என்.எம்.நஸீரின் வேண்டுகோளுக்கினங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதித் தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் மேற்பார்வையில்…

Read More

இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!

2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டியது அவர்களின் உரிமையாகும். எனினும் பல சிறுவர்கள் இன்று தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்டாஸா தெரிவித்துள்ளார். இலங்கையின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், 18வயது வரை அவர்கள் பாடசாலை கல்வியை பெறவேண்டும் இதற்கு கீழ் உள்ள…

Read More