Headlines

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்!

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் தலைமையில், கொழும்பு 15, மட்டக்குளிய, பொகுணுவத்த பிரதேசத்தில் இன்று  (26) நடைபெற்ற ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முகாமிற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வருகை தந்ததுடன், சிகிச்சை பெற வருகை தந்தவர்களுடனும் கலந்துரையாடினார்.

Read More

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் பா.உ ரிஷாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,…

Read More

‘புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குப் பதிவை நிராகரிக்க முடியாது’ – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அலி சப்ரி எம்.பி காட்டம்!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட பொதுஜன ஜக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல் மாயாதுன்ன முன்வைத்த யோசனைக்கு எதிராக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது எதிர்ப்பை வெளியிட்டார். புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முதலாவது கூட்டம், இன்று (18) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே, இந்த யோசனைக்கு அவர் தனது பலத்த எதிர்ப்பை வெளியிட்டார். அபிவிருத்திக்…

Read More

இடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்!

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு…

Read More

செங்காமம் பாடசாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்..!

பொத்துவில், செங்காமம், அல்மினா மகா வித்தியாலயத்தின் பௌதிக வளங்களுக்கு காட்டு யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்பு மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக, பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஸாஜகான், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு, நேற்று (16) பாடசாலைக்கு உடனடியாக களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அடுத்த நாளே யானை தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். அதற்கமைய, தடுப்பு வேலி அமைக்கும் பணி, இன்று (17) காலை…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்-கனடா உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னின் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (14) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்”- தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை!

கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முதலைப்பாளி உள்ளிட்ட பல கிராமங்களில் தொலைபேசிகளுக்கான இணையத்தள தொடர்பாடல்களுக்கு போதுமான வலையமைப்பு (Network) இல்லாமையால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும், இது தொடர்பில் தொழில்நுட்ப அதிகாரிகளை அனுப்பி இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுமாறும் பிரதான மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்பிட்டி பிரதேசத்துக்கு அண்மையில் தாம் விஜயம் செய்திருந்த போது, கையடக்கத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் இல்லாத குறையினை அவதானிக்க முடிந்தது எனவும்…

Read More

அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் முஷாரப் எம்.பிக்கு பாராட்டு விழா..!

பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு, பொத்துவில் ஹேங்லூவ்ஸ் ஹோட்டலில் (05) இடம்பெற்றது. அதிபர் சங்கத்தின் தலைவரும் பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபருமாகிய ஜனாப்.கே.ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.புஹாரியினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துரையும் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு, அதிபர் சங்கதத்தினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு, அது நினைவுச் சின்னமாகவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொத்துவில்…

Read More

புத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்!

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள் போக்குவரத்து சேவையினை நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் முகாமையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கரைத்தீவிலிருந்து பல தேவைகளுக்காவும் குறிப்பாக, மாலை நேரத்தில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள், நோயாளிகளை பார்வையிட்டதன் பின்னர், மீண்டும் மாலை 6.00 மணிக்கு கரைத்தீவுக்கு செல்வதற்கு பேரூந்து வசதிகளின்றி பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதனையடுத்து, புத்தளம் பேருந்து…

Read More

‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு!

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இது தொடர்பில், அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்குத் தேவையான வைத்தியர்கள் இன்மையால், பிரதேச…

Read More

‘அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அலி சப்ரி ரஹீம் எம்.பியின் பாராளுமன்றச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ், பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி, கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் நஸீர் ஆகியோர்…

Read More

“மினி கார்மெண்ட்” செயற்திட்டத்தின் மூலம் பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, அவ்வமைச்சின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மினி கார்மெண்ட் (Mini Garment) செயற்திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (3) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். குறித்த நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு, இந்தச்…

Read More