Headlines

உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர் றிஷாத் அவசரக் கடிதம்

-ஊடகப்பிரிவு – கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், கடந்த ஒரு வருடமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 2010 ஜனவரி 10 ஆம் திகதி தொடக்கம் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆணைக்குழு, தனது விசாரணைகளை நடாத்தி வருகின்றது. தற்போதைய…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீன் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு விஜயம்

கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது குறித்து இன்று பிரதமர் தி.மு.ஜயரத்னவையும் சந்தித்துள்ளார். அதே வேளை இன்று காலை மீண்டும் கிரேண்ட் பாஸ் பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு சேதத்துக்குள்ளானதை பார்வையிட்டுள்ளார் சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் வன்னியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக கொழும்பு திரும்பியதுடன்,கிரேண்ட் பாஸ் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம்- புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷட் பதியுதீன் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர் என்றும், முசலிப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மேலும் கூறியதாவது, விடுதலைப் புலிகளினால் இந்தப்…

Read More

விளக்கங்களைக் கேட்பதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்

-சுஐப் எம்.காசிம் – கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை அவர்களின் அழைப்பின்பேரில் இன்று காலை அங்கு சென்று தான் வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை (26/08/2016) தெரிவித்தார். எதிர்வரும் 29 ஆம் திகதியே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தன்னை அழைத்திருந்த போதும், அன்றைய தினம் தனக்கு பல வேலைப்பழுக்கள்…

Read More

ஒன்றுபடுவதன் மூலமே நமது இலட்சியத்தை அடைய முடியும் -றிஷாத் பதியுதீன்

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஏற்பாட்டில் பழைய குத்பா பள்ளி கலாசாரமண்டபத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது,சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக புத்தளம் மக்கள் இன்று பிரிந்து செயல்படுகின்றனர். என்னதான் கட்சிக்கொள்கைகள் இருந்தாலும் சமூகம் என்று வரும்போது நாம் ஒன்றுபடுவதன்…

Read More

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார்; ரணில் விக்கிரமசிங்க

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர் தனியாக ஒன்றுகூடி; தனியாகப் பேசி; தனியாக முடிவெடுக்கின்றனர். உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில் 2 தடவைக்கு…

Read More

பிரதமரின் கருத்துக்கு மஹிந்த வருத்தம்

ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (28) தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜராகினார். அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பிரசாரம் செய்ததுக்கான பணத்தை வழங்காமல் மோசடி செய்யதாகக் கூறப்படும்…

Read More

திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து! வீடியோ இணைப்பு!

ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை….

Read More

தோப்பூர் அல் ஹம்ரா மத்திய கல்லூரியின் ஆறாந்தர புதிய மாணவர் அனுமதி ஆரம்ப நிகழ்வு

தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் ஆறு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர்  வட்டாரக் குழு தலைவர் முஜாஹித் தலைமையில் இன்று (06) நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை உற்சாக வரவேற்பளித்தார்கள். பாடசாலை வளாகத்தில் இதன் போது மரம்…

Read More

சியாம் கொலை – வாஸ் குணவர்தனவுக்கு பிணை?

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார். எனினும் சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம்…

Read More

முஹம்மது நபி பற்றி தவறாக கூறிய கிறிஸ்துவ பாதிரியாரிடம் சவால் விட்ட 8வயது சிறுவன்!

-முஹம்மது மசூத் லண்டன்  நகரில் பாதிரியார் ஒருவர் முஹம்மது நபி அவர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.  இதனை கவனித்த 8 வயது சிறுவன் அருகில் இருந்த முதியவரிடம் தங்களின் சேரை 5 நிமிடம் தாருங்கள் என்று கேட்டு அதன் மேல் ஏறி நின்று கிருஸ்த்துவ பாதிரியாரிடம் நீங்கள் முஹம்மது நபியை பற்றி தவறாக பரப்புரை செய்கிறீர்கள். முடிந்தால் ஆதாரத்தை தாருங்கள் என்று சவால் விட்டான். இதை பார்த்து கொண்டு இருந்த முஸ்லிம் அல்லாத…

Read More