Headlines

கிழக்கு முதலமைச்சரும் பாதுகாப்பு படைவீரர்களும்

கடந்த (20.05.2016) ஆம் திகதி திருகோணமலை சாம்பூரில் இடம்பெற்ற பாடசாலை விழாவொன்றில் முதலமைச்சர் நஸீர் அகமத்தை பற்றி  ஊடகங்களில் பூதாகரமான செய்திகள் வெளியிடப்பட்டன. பொதுக்கூட்டமொன்றில், அதுவும் பாடசாலை மாணவர்களும், அமெரிக்க தூதுவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது வார்த்தைப் பிரயோகங்களும் நடந்து கொண்ட முறையும் கண்டிக்கத்தக்கது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அத்தகைய நடத்தைக்கு அவர் உந்தப்பட்டாரா என்பதை அறிவது மிக முக்கிமாகும். 13 ஆம் யாப்புத் திருத்தத்தின் மூலம்  உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்; , அத்தோடு…

Read More

அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது!

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது. இலங்கைக்கு  சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக  தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திண்ம வீதி டயர் (OTR)  ஏற்றுமதிக்கான மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வைக்கான …

Read More

தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில்

கொழும்பு – புத்தளம் வீதியில் நீர்கொழும்பு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று இன்று காலையில் தண்டவாளத்தை விட்டு விலகியதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!

நாட்டின் தென்பாகங்களிலும், மேல் மாகாணப் பிரதேசங்களிலும் மலையகங்களிலும் இன்று(21) பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தில் சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் நிலவுகிறது எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Read More

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்

தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்தார். பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Read More

சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரலில்

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7  ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   2013 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம்…

Read More

18,500 படையினர் சட்டரீதியாக விலகினர்

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, முப்படைகளையும் சேர்ந்த 18,500 பேர் சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர் என்று, அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த 18,500 பேரில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலதரப்புகளையும் சேர்ந்தோர் உள்ளனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம், ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஒருமாத காலத்துக்கு அமுலில் இருந்தது. இக்காலப்பகுதியில், இலங்கை தரைப்படையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்களாக 16ஆயிரத்து 920 பேரும், கடற்படையில் 831 பேரும்…

Read More

மரண தண்டனையை அமுல்படுத்த, ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க

மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் ! பிரதமரிடம் பைரூஸ் ஹாஜியார்

அஸ்ரப் ஏ சமத் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடத்தில் கடிதம் ஒன்றின் மூலம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குறிப்பாக அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம்…

Read More

மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார். இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில்…

Read More

அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக நடத்திச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 7 அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இது…

Read More

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More