Headlines

ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; வெளிநாடு சென்றிருந்தாலும் கைது செய்வோம்: ராஜித சேனாரத்ன

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராவது நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேசப் பொலிஸாரின் உதவியோடு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதுவொன்றும் அவ்வளவு சிரமமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும் – பிரதி அமைச்சர் அமீர் அலி

-எச்.எம்.எம்.பர்ஸான் தற்போதைய சூழலில் போதை வஸ்து பாவனையை அதிகம் அதிகம் பாவிக்கக் கூடியவர்களாக நம் இளைய சமூகத்தினர் ஆளாகியுள்ளனர் இந்த விடயமானது நம்மத்தியில் மிகக் கவலை தரும் விடயமாகவுள்ளது. என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி நேற்று முன்தினம் 17ம் திகதி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். தொடர்ந்தும் அமைச்சர் பேசுகையில், போதை…

Read More

ஷசி வீரவன்ச மீது வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்…

Read More

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது; சம்பிக்க ரணவக்க

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு முழுவதும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1186 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்விதப் பிரச்சினையுமின்றி பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து அது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். -Thinakkural-

Read More

கவர்ச்சியான கண்களை வெளியில் காட்ட தடை – சவுதி அரேபியா

கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள்….

Read More

மத்திய மாகாண சபையில் அமளி

மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…

Read More

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற…

Read More

புதிய உறுப்பினர் சிராஜ் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 02 ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் நேற்று (12) மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்….

Read More

பொறியியலாளர்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது. பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பெருமிதம்!!!

சுஐப் எம் காசிம் வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். மின் சக்தி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பொறியிலாளர் சட்ட மூலம் தொடர்பிலான விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதிகளின் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும் வகையில் பணத்துக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் நாடளாவிய ரீதியில் பட்டங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும்…

Read More

அப்பாவிகளை கொல்பவன் முஸ்லிமே அல்ல: அமிர் கான் கடும் கண்டனம்

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை…

Read More

நான் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டவன்: மஹிந்த

முஸ்­லிம்­களின் நலனில் என்றும் அக்­கறை கொண்­டவன் நான். முஸ்­லிம்கள் நீங்கள் இந்த புனித ரம­ழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்­த­னை­களை இறைவன் அங்­கீ­க­ரிக்­கிறான். நோன்பு பிரி­வினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்­ப­வை­களை உங்­க­ளி­லி­ருந்தும் அகற்­றி­வி­டு­கி­றது. முஸ்­லிம்கள் நீங்கள் துவேசம், குரோ­த­மற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு நிச்­சயம் உதவி செய்­வீர்கள் என நம்­பு­கிறேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பொதுத் தேர்­தலில் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பில் குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னுவை தாக்கல் செய்­வ­து­விட்டு அவர் குரு­நாகல்…

Read More