Headlines

இதுதான் இஸ்லாம்! முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் ! ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015), கீழே கண்டெடுத்த 25 சவரன் நகை, உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, ஒரு முஸ்லிம் பெண்மணி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார். மேற்படி பெண், ஆசிப் நகரிலிருந்து ‘ஹகீம் பேட்டை’க்கு சென்றுக் கொண்டிருக்கையில், அனாதையாக கீழே கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததைக் கண்டார்….

Read More

IPHONE ஐ கண்டுபிடித்தது யார்? – புதிய சர்ச்சை

ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை கண்டிபிடிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி சர்ச்சைக் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி “ எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கு இல்லையா (ஐபோனை காட்டியப்படி), இதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்க அரசின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் இருந்து வந்தது. ஜி.பி.எஸ். எல்.இ.டி. பிளாட் திரை, டிஜிட்டல் கேமரா, வயர்லெஸ் தரவு சுருக்கம் உட்பட முக்கியமான அனைத்தும் அரசின்…

Read More

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வாக்குகளை பாழாக்காதீர்கள்- கல்முனையில் அமைச்சர் றிசாத்

இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால்  எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அதி கூடிய வாக்குகளால் இந்த பிரதேச மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள்…

Read More

மலைய மக்களுக்கு இலங்கையர் என்ற கௌரவம் வழங்க வேண்டும்

மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என அடையாளப்படுத்துவதை ஒழித்து இலங்கையர் என்ற கௌரவத்தை வழங்கவேண்டும் என  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற  உறுப்பினருமான  அனுரகுமார  திசாநாயக்க  தெரிவித்தார். இந்த விடம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில்  அவர் இவ்வாறு வலியுறுத்தினார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு விசேட அதிகாரசபை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அதற்காக  அதிகளவிலான நிதியை அரசாங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இலங்கை சுதந்திரம் அடைந்து 67…

Read More

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது . அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தேசப் பிரிய உள்ளிட்ட அதிகாரிகள்.மற்றும் பிரதேச செயலாளர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். இதன் போது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த சில…

Read More

பல்கலை மாணவர்களுக்கு 2208 மேலதிக அனுமதி

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கை இம்முறை மேலதிகமாக 2208 பேரால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. குறித்த மேலதிக மாணவர் அனுமதியின்போது பொறியியல் மற்றும் உயிரியல் தொடர்பான கணித, விஞ்ஞானப் பிரிவுகளின் புதிய பாடநெறிகளுக்கு 1800 வரையான மேலதிக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதன் பிரகாரம் இம்முறை மொத்தமாக 27603 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலதிகமாக அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான புதிய பாடநெறிகள் களனி, ஸ்ரீஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ, ருஹுணை பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட…

Read More

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்,

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் இன்று கொஹுவலையில் திறந்து வைப்பு நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நாளை கொஹுவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றுதலுடன் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைக்கேற்ப இவ்வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றது. 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கின்றமை…

Read More

திவிநெகும பரீட்சை நடத்துவதில் சிக்கல்

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான  பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும்…

Read More

 VIDEO-“கட்சியிலிருந்து எவர் வெளியேறினாலும் திறமையாளர்களை அடையாளப்படுத்துவோம்” – கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்!

அப்துல்லாஹ் மஹ்ரூபின் கடந்தகால செயற்பாடுகளுக்கு நன்றி”  திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப். எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து,…

Read More

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு!!!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக்கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பள்ளிவாசலின் திருத்த வேலைகள் இருப்பதாகவும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கென சில வசதிகளை செய்து…

Read More

அல்லாஹ்வின் துணையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை..

சனாஸ் முஹம்மத் கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னாs; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்தின் தேவையுணர்ந்து எமது சமூகத்தின் நன்மைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அனைத்து மக்கள் பிரதி நிதிகளுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்த போது இந்த தையல் இயந்திரங்கைளை வறிய…

Read More

கொழும்பு நடைமுறை மாநாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

கொழும்பு நடைமுறை மாநாட்டில் ஐந்து பிரதான விடயங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார். அவர் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தொழிலாளர்களின் ஆற்றல்களை கண்டறிதல், சிறப்பான தொழில்வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சந்தை ஆய்வு, அந்நிய நாட்டு செலாவணியை முறையாக கவர்ந்திழுத்தல் ஆகிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார். கொழும்பு நடைமுறையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டமும்,…

Read More