Headlines

பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றமடையும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்படவுள்ளதாக நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள் அமைச்சு காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இதற்கான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வுகளை சரியான முறையில் மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

நீதி கிடைக்கும்: ஹிருணிகா

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார். பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த ஹிருணிகா பிரேமசந்திர, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…

Read More

“அனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட்” இஷாக் ரஹ்மான் எம்.பி!

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (11) பல்வேறு அபிவிருத்தித்…

Read More

லேக்ஹவுஸ் ஊழியர்கள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சிலர் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

நிலைமை இஸ்ரேலுக்கு எதிராக இருந்தால் ?

– அபூஷேக் முகம்மட் – 1.நெடன்யாஹுவின் மனைவியும் அவரது குழந்தையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்… 2.அல்லது, இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பில் முக்கிய ஒருவரது மனைவியும் பிள்ளையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்… 3.இப்போது இஸ்ரேலின் நிலைமை எப்படி இருக்கும்? இஸ்ரேல் ஹமாஸுக்கு எப்படி பதிலடி கொடுக்கும்? இப்படி நடந்தால் இஸ்ரேல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா ? 4.உலகமே மௌனமாக இருந்தாலும் அரபு சியோனிஸ்டுகள்கள் வாய் திறக்க ஆரம்பிப்பார்கள் … 5.கலாநிதி அப்துல்லாஹ் நபீசி கூறுவது போன்று அரபு சியோனிஸ்டுகளுக்கு…

Read More

எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவுசெய்வார்

எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பதை சபா­நா­ய­கரே தீர்­மா­னிப்பார். சபா­நா­ய­கரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்­ச­ர வைப் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். இது தொடர்­பாக லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எவ­ரது பெய­ரையும் அர­சியல் கட்­சிகள் பிரே­ரிக்­கலாம். இதற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. ஆனால் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கே உள்­ளது. எனவே எதிர்க்­கட்சித் தலை­வரை சபா­நா­ய­கரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி…

Read More

ரயில் கூரையில் ஏறி விபரீத செல்பி: 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்

செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. மும்பையில் உள்ள புனித சேவியர் உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சகில்(14). கஞ்ஜூர்மர்க் பகுதியைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதற்காக நாகூர் ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். திடீரென விசித்திரமாக எதையோ யோசித்த சகில், ஸ்டேஷனில் நின்றிருந்த ரெயிலின் கூரை…

Read More

பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் – றிஷாத் பதியுதீன் (நேர்காணல்)

– கிருஷ்ணி இஃபாம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய செவ்வி: கேள்வி: எதிர்வரும் செப் 16ந் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? பதில்: வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப்படுத்தும் வகையில்…

Read More

‘ரண் மாவத்’ அபிவிருத்திகள் சம்மாந்துறையில் ஆரம்பிப்பு..!

‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி – முதலாம் குறுக்குத் தெரு – மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட் இடும் பணிகள் வேலைத்திட்டம் இன்று (14.06.2019) பி.ப. 1.30 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து), பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ….

Read More

2016 ஜனவரிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்க உறுதி

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 2016 ஜனவரி இறுதிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மீரியாபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாதவண்ணம் நிலத்தை செப்பனிடுதல், மூலப்பொருட்களின் விநியோகம், போன்ற பல காரணிகள் இதற்கு…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர். இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த…

Read More

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு!!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து நாவற்குடா பாஸ்டர் லோகநாதன் அவர்களின் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் இன்று 06.11.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் றமனி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More