Headlines

எபோலா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 600 கோடி: மைக்ரோஸாஃப்ட் துணை நிறுவனர் உதவி

எபோலா நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 600 கோடி) அளிப்பதாக மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கெனவே அவர் 15 மில்லியன் (சுமார் ரூ. 90 கோடி) அளித்துள்ள நிலையில், கூடுதலாக உதவித் தொகையை அறிவித்துள்ளார். இப்போது அறிவித்துள்ள தொகையைத் தவிர, எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் விதத்தில், உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக, அவர் வாஷிங்டனில்…

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்!!!

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை (26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்…

Read More

நவீன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-சுஐப் எம்.காசிம் – மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். மன்னார் நகரிலிருந்து வட திசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15 ஆவது மைலில் இந்தக்கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். சுமார் 1000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. இந்தக்கிராமம் பல கிராமங்களின் மத்தியிலே கேந்திர…

Read More

ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…

Read More

ஈரான் அணு உலையை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஈரானில் உள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய உலகின் சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக அறியப்படும் இஸ்ரேல், ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக வேவு…

Read More

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பதவியேற்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (20) ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்தார். பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More

ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்து வழங்கும் நிகழ்வு

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்தாட்டம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கழக தலைவர் எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! இன்று எமது இளைஞர்கள் மத்தியில்…

Read More

துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் கொன்று குவிப்பு – 3 ஆயிரம் வீரர்கள் கைது

துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, தொடர்ந்து 4 முறை ராணுவ புரட்சிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு. அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் டாங்கிகளை நிறுத்தி,…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தவிசாளர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட விடயங்கள் இந்த பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்படும் அதேபோல் இந்த பிரதேசத்தில் வாழும் இளைஞ்சர் யுவதிகளின் பிரச்சினைகள் அதேபோல் இந்த பிரதேசத்தில் இருக்கும் 83 கிராமங்கள் உள்ளது அதேபோல் 34 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இந்த பிரதேசபை…

Read More

‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஆட்சியின் ஸ்திரம்…

Read More

முட்டை ஒன்றின் விலை ரூ.45 ஆயிரம்

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில் செல்லமாக வளர்ந்து வந்த பிங் பாங் அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது. ஆச்சர்யத்தில் வாயடைத்து போன கிம் இந்த முட்டையை ஆன்லைனில் விற்க முடிவு செய்தார். பின்னர் ஈபே-வெப்சைட்டில் விற்பனைக்கு விளம்பரம் செய்தார். அதை பார்த்து பலர் வாங்குவதற்கு…

Read More

ரவூப் ஹக்கீமுக்கு, லக்ஷ்மன் கிரியல்ல பகிரங்க சவால்..!

அஷ்ரப் ஏ சமத் இலங்கையில் இருநூற்று ஐம்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஐ நா சபைக்கு முறைப்பாடு அனுப்பிய நீதி அமைச்சர் ஹக்கீம் பள்ளிகள் உடைக்கப்பட்டதற்காக இலங்கையில் என்ன நீதியை நிலைநாட்டியுள்ளார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, ராஜபக்ஷ குடும்பத்துக்கு அதரவு வழங்குவதை  ஞாயம் கற்பிக்க கடந்த வாரம் அலறி மாளிகையில்…

Read More