Headlines

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாவனைக்குதவாத இனிப்பு வகைகள், போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என்பவையே காலாவதியான நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அ.இ.ம.கா. ஏற்பாட்டில்  இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா, தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் அண்மையில்  இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, மஹ்ரூப் எம் பி, கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா (வீடியோ)

அடம்பன், பள்ளிவாசல்பிட்டி, மருதோண்டுவான், வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. ரோஹிணி தலைமையில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், மௌலவி அஷ்ரப் முபாரக் மற்றும் உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்…

Read More

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, முழு சமூகத்திற்கும் பாரிய இழப்பு ஜிப்ரி ஹனீபாவின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

  திஹாரி அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான ஜிப்ரி ஹனீபாவின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி அனைத்து சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சமூதாயத்தில் வலது குறைந்தோர் கவலையின்றியும், நிம்மதியுடனும் வாழும் வகையில், அவரது முயற்சியினால் திஹாரியில் உருவாக்கப்பட்ட அங்கவீன நிலையம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அனைத்து சமூகத்திலுமுள்ள ஊனமுற்றவர்களுக்கும் இந்த நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டது. அங்கவீனர்களுக்கு உதவியதன்…

Read More

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

‘அமைச்சர் ரிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 04 சபைகள் கிடைத்தது’ தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு!

-பரீட் இஸ்பான்- நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னியில் 4 சபைகளின் தவிசாளர்களையும் 2 பிரதித் தவிசாளர்களையும் 66 உறுப்பினர்களையும் (மன்னார் – 34, வவுனியா 20, முல்லைத்தீவு 12) பெற்று வன்னியிலே மாபெரும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கியமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சேவையின் வெளிப்பாட்டுக்கான அடையாளமே என மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சலுகைகள் கிடையாது; மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்: அஜித் ரோஹண

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். விசாரணையின் போது கோத்தபாய ராஜபக்ஷவுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை…

Read More

அமைச்சர் மேர்வின் சில்வாவிவன் மகனுக்கு செம அடி

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில் இன்று சனிக்கிழமை(01) அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர். Tm

Read More

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல…

Read More

ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தும் ஏன் இன்னும் இன ஐக்கியத்தை சீர் குழைப்பவர்கள் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் இந்த நாட்டின் இனவாதிகளின் இனவாத பேச்சுக்கள் மேலோங்கி இருப்பதை நாங்கள் காண்கின்றோம். இதேவேளை சில பௌத்த…

Read More