Headlines

இலங்கை வெளிவிவார அமைச்சர் சீனாவிற்கு விஜயம்

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு மங்கள சமரவீர சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயர் அதிகாரியொருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…

Read More

இடமாற்றம் பெற்றவர்கள் உடனடியாக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்கா விட்டால் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். ஏற்கனவே வருடாந்த இடமாற்றத்தில் 13 பேரும் கடந்த வாரத்தில் 26 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. எனவே இவர்கள் உடனடியாகத் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ் 123 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து வேறு…

Read More

ஜனாதிபதி தலைமையில் முஸ்லிம்கள் தொடர்பில் விசேட கூட்டம்

– அஸ்ரப் ஏ சமத் – வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.ப 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. இதில் அமைச்சா்களான  றிஷாத் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன்,  ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட், வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்….

Read More

நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். அத்துடன் குறித்த விமானம் நேற்று இரவே நாடு திரும்புவதாக இருந்த நிலையில்…

Read More

யாழ் ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட நிதியொதுக்கீட்டில், இருபது இலட்சம் ரூபா செலவில் யாழ் / ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மேற்படி வேலைத்திட்டங்களை இன்று (01)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் அமைச்சரின் செயற்திட்ட இணைப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Read More

ஜனாதிபதியின் காத்தான்குடி கூட்டத்தில் கம்பி சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் காயம்

அபூ ஷஹ்மா (19) காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தின் இடையில் பொலித்தீன் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று சரிந்து விழுந்ததில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர். அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே குறித்த கம்பி சரிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

தலைகீழாக நின்று ஆர்பாட்டம்

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More

ஹஜ்ஜுக்கு குறிப்பிட்டவர்களே போகாமல் அந்த வாய்ப்பை இன்னுமொரு முஸ்லிமுக்கு வழங்குங்கள் – ஜனாதிபதி

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார்.   பல தடவைகள் செல்லும் நடை முறைக்குப் பதிலாக அனைத்து முஸ்லிம்களும் இந்த யாத்திரையை மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் செயற்படுத்தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, மத விவகார அமைச்சினூடாக இதற்கான நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.   வெலிமடையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி…

Read More

மக்கள் காங்கிரஸின் களுத்துறைக் கிளையின் மத்திய குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை கிளையின் மத்திய குழுக் கூட்டம், களுத்துறை நகரசபை உறுப்பினரும், அமைப்பாளருமான ஹிஷாம் ஸுஹைல் தலைமையில் (23) நடைபெற்றது. இதன்போது, கட்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பொதுவசதிகள், சுயதொழில் என்பவற்றிற்கான நிதி பயன்படுத்தப்பட வேண்டிய செயற்கிரமம் விரிவாக ஆராயப்பட்டு, பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு அமைப்பாளரால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாவனைக்காக மேலும் 06 குளாய்நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹிஷாம் கூறியதாவது, சாதாரண மக்களுக்கு சாக்கடையாகவும் திட்டுப்பட்டதாகவும்…

Read More

தீர்க்கமான பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது – றிஷாத் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காஸிம் – மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம். மர்ஹூம் அஷ்ரப்…

Read More

அம்பாறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை தூக்கி எறிந்துவிட்டு சமூகத்தின் பாதுகாப்பு கருதி 71 உறுப்பினர்களுடன் வெளிவந்த முதலாவது கட்சி என்ற வகையில்,மைத்திரி அலையின் பிரதான பங்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொண்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கிழக்கு மக்களின் எதிர்கால பாராளுமன்ற பிரதி…

Read More