Headlines

மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு!





-ஊடகப்பிரிவு- 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், நிந்தவூா் மாந்தோட்டம் வட்டாரத்திற்கான மகளிரணிக் கூட்டம் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கு,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில்அண்மையில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உட்பட ஏராளமான பெண்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில், பெண்களுக்கு தேர்தல் சம்பந்தமான விழிப்பூட்டல் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்தப் பிரதேசங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும்  கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை, மாளிகைக்காடு பிரதேசத்திலும் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *