Headlines

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை  பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;. இந்நிகழ்வில்…

Read More

குருடர் முன் பிச்சைகேட்டு செவிடன் காதில் சங்கு ஊதுகின்றஅரசியல் என்னிடம் இல்லை!

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பதுஏன்? என்றுகேள்வி எழுப்பினார் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பானமுக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முசலியில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்! ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை…

Read More

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக ஜெனரல் சரத் பொன்சேகா நாளை பதவியேற்கிறார்!

சுதந்திர இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். முப்படையின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒத்ததாக கருதப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட சகல உரிமைகளும் மீள வழங்கப்பட்டது. இதேவேளை, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட ஒருவரால் அரசியலில் ஈடுபடமுடியாது என மனித உரிமை ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி…

Read More

எமது கட்சி மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது -YLS ஹமீட்

– எஸ்.அஸ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கல்முனை மண்ணில் இன்ஷா அல்லாஹ் மக்கள் பங்களிப்புடன் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். இன்று எமது கட்சியின் அம்பாரை மாவட்ட வருகையானது மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் தேர்தல் வேட்பாளருமான வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கட்சியின் சார்பாக கல்முனையில் 7 ஆம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் சிரேஷ்ட…

Read More

பிரதியமைச்சர் பைசல் காஸிமின் செயலாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பைசல் காசிமின் செயலாளர் அன்வர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01 ) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே செயலாளர் அன்வர்தீன் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளது!

சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 15 % வற் வரி சேர்க்கப்பட்டதால் சிகரெட் ஒன்றிற்கான விலை ரூ.5 இனால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 35 ரூபாவாக இருந்த சிகரெட் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்ககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபா முதல் 50 ரூபா வரையில் சிகரெட் ஒன்றின் விலை நிர்ணயிக்கப்படலாம் என…

Read More

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : ருவன் விஜயவர்த்தன

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலை முன்னிட்டு ,எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பரப்புரைகளை கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று…

Read More

கொஸ்கம தீ விபத்தில் காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறினார்.

Read More

சிரியாவிலிருந்து வெளியேறிவரும் அகதிகள் மீது, ஹங்கேரி பொலிஸார் தாக்குதல்

ஹங்கேரி பொலிஸார் குடியேறிகள் மீது கண் ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். ஹங்கேரி-செர்பிய எல்லையில் இருக்கும் ஹொர்கோஸ்-ரொஸ்கே கடவையில் நேற்று முன்தினம் இந்த மோதல் ஏற்பட்டது.  இதன் போது ஆத்திரமடைந்த நுற்றுக்கணக்கானவர்கள் ஹங்கேரி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற முயன்றுள் ளனர். இந்த பதற்றத்தில் இரு…

Read More

நாடு திரும்புகிறார் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (16)  நாடு திரும்புகிறார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக சென்றிருந்த ராஜித சேனாரத்ன சிகிச்சை வெற்றியளித்த நிலையில் இன்று நாடு திரும்பவுள்ளதாக அமைச்சரவை தரப்புக்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 19ஆம் திகதி திடீரென்று மாரடைப்புக்குள்ளான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விஷேட விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் நாடு திரும்பிய உடன் அரசியல் நடவடிக்கைகளிலும், தமது அமைச்சு வேலைத்திட்டங்களிலும்…

Read More

36 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

பெண் பணியாளர்களுக்கு பதில் ஆண் சேவையாளர்-வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு

பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு…

Read More