Headlines

முசலி, வேப்பங்குளம்  இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு

நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர் மேலும் கிராம மக்கள் பள்ளி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஊர் அபிவிருத்தி சம்மந்தமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி தொடர்பாகவும் பேசப்பட்டது.

Read More

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் 5 ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 193 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய மாணவன் முஹம்மது அன்வர் அர்ஷக் அகமட் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ,ஊடகவியலாளருமான எம்.எச்.எம். அன்வர் மற்றும் காத்தான்குடி நகர சபை முகாமைத்துவ உதவியாளர் ஜனாபா சபீனா ஆகியோரின் 3வது…

Read More

தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தித் திட்டங்களை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் திறந்து வைத்தார்.

 திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் நேற்று  (12) திறந்து வைத்தார். தம்பலகாம பிரதேச செயலக பிரிவின் சிறாஜ்  நகர் பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் ,பாடசாலை மைதானம் ஷாலிஹாத் ஜும்மா பள்ளி மதில்  என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பல மில்லியன்கள் ரூபா செலவில் இப் புதிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உட்கட்டமைப்பு கிராமிய அபிவிருத்தி…

Read More

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முடியாது; ஐ.நா கைவிரிப்பு

காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது. காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ், இம்மாதம்; 12ஆம் திகதி ஐ.நா.பொதுச் செயலாளர்…

Read More

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள் அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள் கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை…

Read More

உலக நாடுகள் அனைத்தும் எங்களுடன் இணைந்துள்ளது! – ராஜித

உலக நாடுகள் அனைத்தும் இன்று எங்கள் நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், அன்று எங்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேற்கத்திய நாடுகள் உட்பட இன்று எங்களுடன் இணைந்துள்ளது. இலங்கை தற்போது சர்வதேசத்தினுள் பெயர் ஒன்றினை பெற்றுகொண்டுள்ள நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்டட புரட்சியுடன் உலகினை வெற்றி கொள்ள முடிந்துள்ளது….

Read More

அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில்  நேற்று முன்தினம்  (13) ஈடுபட்டார்.

Read More

அஸ்ரபை அழிக்க அன்று சதி; றிஷாதை அழிக்க இன்று சதி முயற்சி!

ஏ.எச்.எம்.பூமுதீன் முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்க அன்று முஸ்லிம் காhங்கிரஸ் தலைவர் அஸ்ரபை அழித்தது போன்று இன்று அ.இ.ம.கா தலைவர் ரிசாத் சபதியுதீனை அழிக்க பாரிய சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை முறியடிக்க முஸ்லிம் சமுகம் ஒன்றுபட வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கபப்பட்டு வருகின்றது. நாடு பூராகவும் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பொதுநல அமைப்புக்கள் உலமாக்கள் மற்றும் கல்விமான்களால் இந்த கோரிக்கை அழுத்ததமாக முன்வை;கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. மர்ஹூம் அஸ்ரப் அன்று முஸ்லிம் சமுகத்தின் விடிவுக்காகவும்…

Read More

எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் எதிர்க் கட்சித் தலைவருக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நடமாடும் இறை இல்லம்!

சையதுஅலி பைஜி இந்தோனிஷியாவை சார்ந்த முஹம்மது சோப்ரீன் என்பவர் நடமாடும் இறை இல்லத்தை தோற்றுவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது. “கடந்த ரமழானில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு பெரிய சந்தைக்குள் நான் நின்று கொண்டிருந்தேன் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும், ஒரு இடத்தில் அமர்ந்து நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகைக்கா மஸ்ஜிதை தேடிய போது எனக்கு அருகில் எந்த மஸ்ஜிதும் தென்படவில்லை அப்போதுதான், இதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டை செய்வதின் அவசியத்தை நான் உணர்ந்தேன் மக்கள் அதிகம்…

Read More

கொள்கைகளை மறந்து உலமாக்கள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

கொள்கைகளை மறந்து நாட்டிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக விட்டுக்கொடுப்புகள் அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். “இலங்கையில் வாழும் 10 சத வீத முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தாய் நாட்டுக்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளனர்” எனவும் அமைச்சர்…

Read More

மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்

(பெர்னாண்டோ ஜோசப்) மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக கடமையாற்றிவந்த சுமார் 215 பேருக்கு குறித்த நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயம், நீர்ப்பாசணம், காணி உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட அமைச்சின் கீழ் இந்நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலமை…

Read More