Headlines

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை




(பழுலுல்லாஹ் பர்ஹான்)
28-09-2014 ஞாயிற்றுக்கிழமை இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் 5 ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 193 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய மாணவன் முஹம்மது அன்வர் அர்ஷக் அகமட் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ,ஊடகவியலாளருமான எம்.எச்.எம். அன்வர் மற்றும் காத்தான்குடி நகர சபை முகாமைத்துவ உதவியாளர் ஜனாபா சபீனா ஆகியோரின் 3வது புதல்வராவார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும்,காத்தான்குடி பிரதேசத்திற்கும் பெருமையை தேடித்தந்த இவரை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம்.பாரீஸ் அவரின் விட்டுக்குச் சென்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *