Headlines

4-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா அடுத்தடுத்து 3 முறை அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாடு, 4-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயார் ஆகி வருவதாக தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் உள்ள நயாங்பயான் அணு வளாகத்தை உளவாளிகள், தொழில்நுட்ப நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி கண்காணித்து வந்ததில், இது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம், தனது அணு உலைகளை…

Read More

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி

அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார். “வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன,…

Read More

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19), மாந்தை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், 08 சமூக சேவைகள் அமைப்புக்களுக்கான உபகரணங்களையும் கையளித்தார். இந்நிகழ்வில், மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர், உதவிச் செயலாளர், மன்னார்…

Read More

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது

லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே…

Read More

“மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக எனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷிட்- கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, நிந்தவூரில் தேவையுடைய மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கென தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தின் நிந்தவூர் தையல் பயிற்சி நிலையத்திற்கான விஜயம் ஒன்றை  (05) மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, இலங்கை புடவை…

Read More

அடுத்தவருடம் இலவச வாட்ஸ்அப் CALL – இஸ்ரேலின் Viber க்கு பாதிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன்…

Read More

உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் தொங்கிய ஊழியர்கள்: 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் இருவர் சாரம் அறுந்து 69-வது மாடியில் தொங்கினர். மீட்பு பணி தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நிலையில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001- ஆம் ஆண்டில் செப்டம்பர் 11-ந் தேதி அல்-காய்தா பயங்கரவாத தாக்குதலால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2,996 கொல்லப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில்…

Read More

ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார் மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்து சிறந்த உலமாவாக இருந்ததுடன் முஸ்லிம் ஊர்களில் மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். பலகாலமாக அரசியலில் திகழ்ந்த இவர் கண்ணியமான அரசியலை முன்னெடுத்ததை  நாம் அறிவோம் தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகவும் பக்குவமானவராவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் பல முன்மாதிரிகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்….

Read More

கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு

கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை பத்திரங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகை சம்பந்தமாக, தான் வழங்கிய சுயாதீனமான அறிக்கை தொடர்பாகவும் கோப் குழுவுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More