Headlines

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். டாக்டர்.ஹஸ்மியா இங்கு உரையாற்றுகையில், எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. அதனைத் தட்டிக் கேட்கின்ற ஒரே…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என .எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நிலைய நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகம் நுகரக்கூடிய அளவுக்கு பொலிஸ் நிலையம் மற்றும் காணி விடுவிப்பை கொண்டு…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமர் முன்வைத்ததாக அவர் கூறினார். அதன்படி விரைவில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சோபித தேரர் விரக்தி!

சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விழிப்புணர்வு செய்தேன். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினை தொடங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கு வரையில் நடத்தி வந்தேன். நான் எதிர்பார்த்த தேசிய அளவிலான முக்கிய செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமையினால் விரக்தியடைந்துள்ளேன்….

Read More

பாரிய மோசடிகள் குறித்த ஒன்பது விசாரணைகள் நிறைவு

பாரிய மோசடிகள் தொடர்பான ஒன்பது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கை களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதி பதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதி பதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில்…

Read More

கோத்தா கொலை வழக்கு; பெப்ரவரி 6 வரை ஒத்தி வைப்பு

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலன்விசாரணை பிரிவினர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியான ஷிரோமி பெரேராவிடம் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் …

Read More

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு

கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று 02/03/2015 ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக துறையை எவ்வாறு அதிகரிப்பது என்பதுடன், இரு நாடுகளுக்கிடையிளான சந்தை வாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் தூதுவர் உறுதியளித்தார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான திறமையான தொழிலாலர்களை (Skill labour)பரிமாறிக்கொள்வது போன்றவை கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில்…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (05) நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வர்த்தகக் கூடுத்தாபனத்தின் மெகா காட்சியறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்  உயரதிகாரிகள், ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

அதிகமான இலங்கை பணிப்பெண்களை பணியில் அமர்த்த மலேசியா தீர்மானம்

மலேசியாவின் வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் சங்க தலைவர் அந்நாட்டு இணையமொன்றிற்கு வெளியிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பணிப் பெண்களை அமர்த்துவது இலாபகரமானது எனவும், இதுவரைகாலமும் இந்தோனேஸிய பெண்களே அதிகளவில் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றி வந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தோனேஸிய பெண்களை பணியிலமர்த்துவது அதிக செலவு விரயமாகும் காரணத்தினாலேயே வேறு நாட்டு பெண்களை பணியிலமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

வெலே சுதாவின் வழக்கு ஒத்திவைப்பு!

பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் வெலே சுதா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொராயஸினவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலே சுதா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மனிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி…

Read More

அலாஸ்காவில் நடுவானில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!:இரு பைலட்டுக்களும் உயிர் தப்பினர்

வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தின் போது பாரஷூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய இரு பைலட்டுக்களில் ஒருவருக்கு மோசமான காயங்களும் மற்றையவருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகவல் அலாஸ்காவின் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இரு பைலட்டுக்களும் பிராந்திய…

Read More

200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார், உசேன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில்…

Read More