Headlines

இரட்டைப் பிரஜாவுரிமை அனுமதிக்கு அரசு அங்கீகாரம்

இலங்கை அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் துரிதமாக இடம்பெறுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். 750 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 750 பேருக்கு வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். போரினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை…

Read More

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை

(அஸ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ்பெருநாள் தொழுகை மருதானை ஆனந்தாக் கல்லூரி அருகில் உள்ள வைட்பார்க் மைதாணத்தில் இன்று(6) காலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இப் பெருநாள் தொழுகையை டி.எஸ்.ஜ.என்  ரஸ்லான் மௌலவி அவர்களினால் நடாத்தப்பட்டது. மாளிகாவத்தை, மருதானை பிரதேசத்தின் வாழ் முஸ்லீம் ஆண்கள், பெண்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.

Read More

வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று…

Read More

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்

-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

Read More

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு.

ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்திற்கான தேவாலய சுற்றுப்புற பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் நிகழ்வு  மாந்தை பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்… தமிழ், முஸ்லிம், என்ற இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற…

Read More

‘பல்துறை சார்ந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தும், தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்’

சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டமொன்றை பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்தெடுப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   “புத்திஜீவிகள்,  உலமாக்கள், கற்றவர்கள், தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்று வகைப்படுத்தி, அவர்களுடன்…

Read More

හම්බන්තොටට නව විදුලි බලාගාරයක්

– නිලුපුලී – මෙගාවොට් 500ක ධාරිතාවකින් යුතු විදුලි බලාගාරයක් හම්බන්තොට ඉදිකිරීමට රජය සැළසුම් කර ඇති බවත් එහි  ඉදිකිරීම් කටයුතු  නොරොච්චෝලේ ගල් අඟුරු බලාගාරය ඉදිකළ චීන සමාගම වෙත පැවරීමට අදහස් කරන බවත්  රජයේ ආරංචි මාර්ග සඳහන් කරයි. එම චීන සමාගම වෙත  ආයෝජන කලාපයක් සඳහා හම්බන්තොට ප්‍රදේශයෙන් හෙක්ටයාර් 1000ක පමණ භූමි ප්‍රදේශයක් ලබාදීමට රජය සැලසුම් කර ඇති අතර…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல அரபுக்கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல, ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கல்லூரியின்  மேல்மாடிக் கட்டிட அபிவிருத்திப் பணிகள் நேற்று முன்தினம் (16) முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திவுரும்பொல மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அபிவிருத்திப் பணிகளுக்காக சுமாார் இருபது இலட்சம் ரூபா நிதி, அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் குளியாப்பிடிய பிரதேச…

Read More

VIDEO- வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்;

மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- தலைவர் ரிஷாட் தெரிவிப்பு! அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர்…

Read More

அளுத்கம முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும்

கடந்த ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு விஷேட கவனம் செலுத்தவேண்டுமென முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்தார். அளுத்கம அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் தெஹிவளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவத்தின் மேற்குப் பிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இந்நிகழ்வில் கலந்து…

Read More

நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்;அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர்ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஸாத் பதியுதீன் தெரிவித்தார்.தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-  வடக்கு கிழக்கிற்கு வெளியே முதற்தடவையாக தனித்து எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் களம் இறங்கியபோது கொழும்பு மாவட்டத்தில் ஓர் அங்கத்தவரேனும் எமது கட்சிக்கு இருந்திருக்கவில்லை.  மிகக்குறுகிய காலத்தில் நாம் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறியே பிரசாரத்தில் ஈடுபட்டோம்….

Read More

மாற்று கட்சி அங்கத்தவர்கள் அ.இ.ம.கா. வில் இணைவு

-றிஸ்கான் முகம்மட் – நேற்று முன்தினம் (29) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்றம் விவகார செயலாளருமான ARM.ஜிப்ரி தலைமையில் அவரது சாய்ந்தமருது இல்லத்தில் வைத்து பல மாற்று கட்சி அங்கத்தவர்கள் அகில மக்கள் காங்கிரஸ்சியில் அங்கத்தவர்களாக அங்கத்துவம் பெற்று இணைந்து கொண்டனர்.

Read More