Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில்…

Read More

செந்நெல் கிராமத்தில்  அபிவிருத்தி செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமனற உறுப்பினர் இஸ்மாயில் கலந்துகொண்டார்.

தனித்துவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் இன்று செந்நெல் கிராமத்திலுள்ள ஹிஜ்ரா வித்தியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌரவ. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. ஏற்கனவே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரமமொன்று இத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் இக் கிராமம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 10 பிரதேச செயலகங்களுக்கான 100 மில்லியன்…

Read More

பாலஸ்தீனிய பெண்ணுக்கு உலகின் சிறந்த ஆசிரியை பரிசு

குழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களுடன் கூடிய உலகின் சிறந்த ஆசிரியை பரிசு வழங்கப்பட்டது. கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறந்து நிர்வகித்துவரும் சன்னி வர்க்கி தனது சொத்துகளில் சரிபாதியை உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு உதவிடும் நோக்கில் தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த (2015) ஆண்டில் உலகின்…

Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மீன்பிடி நீரியவளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப்வெத ஆராச்சி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர்அலி சாஹிர் மொளலான, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, நவாஸ் கனி , செயலாளர் றூவான் சந்திர, பணிப்பாளர் மீன்பிடி மொன்டி ரனந்துங்க ஆகியோர் கலந்து…

Read More

சமகால அரசியலும் முஸ்லிம்களும்..! – கவிஞர் கால்தீன்-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும் பாரதூரமான ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதி பெரும்பான்மை தேசிய கட்சிகளில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள், சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மையினரின் எண்ணங்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். இது வரலாறாகும். அத்தகைய பிரதிநிதிகளால் சிறுபான்மை…

Read More

பிரித்தானியாவில் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 வயது மாணவி

பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 வயது பெண் ஒருவர் இளம் எம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்திலிருந்து போட்டியிட்ட மேஹ்ய்ரி பிளாக்(Mhairi Black-20) என்ற பெண், அந்நாட்டின் மிக இளம் வயது எம்.பி.யாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டர் என்பவரை 5000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தலில்…

Read More

மீண்டும் மின்தடை.!

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாண ஆளுநராக, றெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், புதிய வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ராஜித உட்பட 06பேர் ஐ.தே.க.வுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான ரவி கருநாயக்க – இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைனின் வீட்டுக்கு இப்தாா் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாா். அதற்காக அஸ்ரப் ஹூசைனின் ஊடகவியலாளா்கள் புத்திஜீவிகள் 50 பேரை அழைத்திருந்தாா். ஆனால் அமைச்சா் சரியாக தாமதித்து 7 மணிக்கே வந்து சோ்ந்தாா். என்னை மன்னித்துவிடுங்கள் சரியாக 5-7 மணிவரை அலரி மாளிகையில் ரணில் தலைமையில் – ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்…

Read More

கெஹலிய ரம்புக்வெலவின் மகன் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பொதுபலசேனாவின் தில்லுமுல்லுக்கள் அம்பலம் ;பலகோடிகள் ஊழல்

மஹிந்த அரசில் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு கடும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பல மோசடிகள் தற்போது அம்பலத்துக்குவர ஆரம்பித்துள்ளன. பொதுபலசேனா அமைப்பால் கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த அசின் விராது தேரர் கலந்துகொண்ட மாநாட்டுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டதாகவும் இந்தப்பணம் வெளிநாடுகளில் பணிபுரியும் அப்பாவி இளைஞர்களிடமிருந்து பலவந்தமாகப் பெறப்பட்டது என்றும் பொதுபலசேனா அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அச்சல சம்பத் தெரிவித்துள்ளார். இது…

Read More

பாராளுமன்ற உறுப்பினராவதற்கு மஹிந்த ஆசைப்படுவது ஏன் தெரியுமா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, தாஜூதீன் கொலை வழக்கின் விசாரணை நடைபெறும் போது மகிந்த ராஜபக்ச நடுங்குகிறார். ஏன் எனில் அந்த இலக்கு எங்கு செல்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கிறது. திவிநெகும குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ச இருக்கிறார். எவன்கார்ட் பிரச்சினை மற்றும் மிக் வானுர்தி கொள்வனவு ஊழலில் கோட்டபய…

Read More