Headlines

“வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை”

வில்பத்து” விவகாரம் தொடர்பில், பேரினவாதிகள் தன்மீது தொடர்ச்சியான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றபோதும், எந்த ஓர் அரசியல் தலைமையும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையெனத் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்குகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், முசலியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் வாழாத பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு, கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருந்த வேளைதான்,…

Read More

போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு : ஜனாதிபதி

எமது நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரச நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வடக்கு – தெற்கு மக்களின் மனங்களை ஒன்றுபடுத்தி வாழக்கூடிய தருணம் ஏற்படும் என நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வரலாற்று தவறுகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்தும் தீவிரவாதிகளிடம்…

Read More

8 வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ள சவூதி அரேபியா சிறுவன் உமர்ரலா

தனது எட்டு வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் உமர்ரலாவை தான் படத்தில் பார்க்கின்றீர்கள் 2015 ஆம் ஆண்டு மிககுறைந்த வயதில் திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக இந்த சிறுவன் மாறியுள்ளான் இவன் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவனர் . இவனது தாயும் திருமறையை திருமறையை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஆவார்

Read More

மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான ஏனைய நுகர்வுப் பண்டங்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உணவு பானங்கள் உள்ளிட்ட ஏனைய நுகர்வு பண்டங்களின் தரம் நாட்டு அபிவிருத்தியின் முக்கிய அளவுகோலாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கொழும்பு தொடக்கம் நாடு முழுவதுமுள்ள உணவக சமையலறைகளில் அந்த தரம் மற்றும் தூய்மையை காண முடியாதெனவும்…

Read More

கிரீஸ் நட்டு வங்கிகளில் பணமில்லை!

கிரீஸ் நாட்டில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61.31 சதவீதம் பேர் வாக்களித்தனர். சிக்கன திட்டத்துக்கு ஆதரவாக 38.69 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆதரவாளர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கிரீஸ் நாட்டின் பண நெருக்கடி தீரவில்லை. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக மெஜாரிட்டியான மக்கள்…

Read More

ISIS விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் – ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில் அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது. இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு…

Read More

இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழாவில் இஸ்ஹாக் ரஹுமான் MP

நாட்டில் புதிதாக 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

மாத்தளை – லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல – வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

Read More

நீதிபதிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரதம நீதியரசரும் குறித்த…

Read More

பனாமா லீக்ஸ் வெளியான விவகாரம்: ஐ.டி. ஊழியர் கைது

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான கோடீசுவரர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இது தொடர்பான சட்ட ஆவணங்களை, பனாமாவை மையமாக கொண்டு செயல்படும் ‘மொசாக் பொன்சேகா’ என்ற சர்வதேச நிறுவனம் பாதுகாத்து வருகிறது. இந்த நிறுவனம் ரகசியமாக வைத்திருந்த ஏராளமான ஆவணங்கள் பனாமா லீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான்…

Read More